விஜயநகரம்: உலகப் புகழ்பெற்ற ஹம்பியில், அவ்வப்போது சிறுத்தை நடமாடுவது சுற்றுலா பயணிகளை பீதியில் ஆழ்த்தியுள்ளது. ஹம்பி, ஹோஸ்பெட், விஜயநகரம், உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாகும். இங்கு கலை மண்டபங்கள், பாரம்பரிய சின்னங்கள் மற்றும் கோவில்கள் உள்ளன.
இந்த இடங்களுக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதன் சுற்றுப்புறங்களில் சிறுத்தைப்புலிகள் நடமாட்டம் உள்ளதால், சுற்றுலா பயணிகள் சரியாக சுற்றி பார்க்காமல் அந்த இடங்களை அவசரமாக சுற்றி வர அச்சப்படுகின்றனர்.
நேற்று மாலை ஹேமகுடா மலையில் சிறுத்தைப்புலி ஒன்று தென்பட்டது. இரண்டு மணி நேரம் அமர்ந்திருந்தது. இதனை சுற்றுலா பயணிகள் பார்த்தனர். சிறுத்தையை பிடிக்க வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வனத்துறையினர் பார்வையிட்டனர். சிறுத்தையை பிடிக்க கூண்டு வைத்துள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன், ஹம்பியின் புறநகர் பகுதியில் விவசாயி ஒருவரை சிறுத்தை தாக்கி காயப்படுத்தியது. இப்போது விருபாக்ஷா கோயிலுக்கு அருகில் உள்ள ஹேமகூட மலையில் சிறுத்தை ஒன்று சுற்றித் திரிகிறது.