சென்னை: முள் சீத்தாப்பழம் பிரேசில் நாட்டைச் சேர்ந்தது. இந்தப் பழம் பச்சை நிறத்தில் இருக்கும். இதன் வெளிப்புறத்தில் முட்கள் காணப்படும். இதன் தோலும் தடிமனாக இருக்கும். இந்தப் பழத்தை இயற்கையான கீமோதெரபி என்கிறார்கள். அதாவது புற்றுநோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைதான் இந்த கீமோதெரபி.
கேன்சர் எனும் மிகக் கொடிய வியாதி சமீபகாலமாக இந்தியாவில் அதிகரித்து வருகிறது என்றுதான் கூற வேண்டும். அதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், கேன்சரை முழுமையாக ஒழிக்க முடியவில்லை. இயற்கையாக நமக்குக் கிடைக்கும் பழங்களில் கேன்சர் நோயை ஒழிப்பதற்கான பல வழிமுறைகள் உள்ளது. அவற்றில் ஒன்றுதான் முள் சீத்தாப்பழம். சீத்தாப்பழம் தெரியும்; அதென்ன முள் சீத்தாப்பழம்?
இந்த முள் சீத்தாப்பழம் பிரேசில் நாட்டைச் சேர்ந்தது. இந்தப் பழம் பச்சை நிறத்தில் இருக்கும். இதன் வெளிப்புறத்தில் முட்கள் காணப்படும். இதன் தோலும் தடிமனாக இருக்கும். இந்தப் பழத்தை இயற்கையான கீமோதெரபி என்கிறார்கள். அதாவது புற்றுநோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைதான் இந்த கீமோதெரபி. இந்த முள் சீத்தாப்பழத்தையும் அதன் இலைகளையும் உண்பதால் 12 வகையான புற்றுநோய்களை வராமல் தடுக்கலாம் என்று கூறப்படுகிறது.
மார்பக புற்றுநோய், நுரையீரல், கணையம் உள்ளிட்டவைகளில் ஏற்படும் புற்றுநோயை இது தடுக்கிறது. எந்த பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாத இந்தப் பழம், புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கிறது. மேலும் புற்றுநோய் செல்களைக் குறைக்கவும் இது உதவுகிறது.
சிறுநீர் பாதையில் ஏற்படும் தொற்றுகளை நீக்கும் இந்தப் பழத்தில் வைட்டமின் சி நிறைந்து உள்ளது. இது செரிமானத்துக்கும் துணை புரிவதோடு, ஒற்றைத் தலைவலியையும் சரி செய்கிறது. அதுமட்டுமின்றி, முள் சீத்தா பழத்தில் பல சத்துகள் உள்ளன. இது இதயத்தை பலப்படுத்தி சீராக இயங்கச் செய்வது மட்டுமின்றி, இதயம் சம்பந்தமான நோய்கள் வராமலும் காக்கிறது.
ஆரம்ப நிலையில் உள்ள காசநோயை குணப்படுத்தும் திறன் இந்த சீத்தாப்பழத்துக்கு உண்டு, கோடையில் ஏற்படும் தாகத்தை இது தணிக்கும். உடல் சூட்டைத் தணித்து உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளவும் இது உதவுகிறது. இவை மட்டுமின்றி, தொடர் வாந்தி, குமட்டல் போன்ற பிரச்னைகளுக்கு சிறந்த நிவாரணியாகத் திகழ்கிறது. மேலும், ஏதாவது அறுவை சிகிச்சை செய்திருப்பவர்கள் இந்த முள் சீத்தாப்பழம் சாப்பிடுவதால் உள்ளுறுப்புகளின் ரணங்கள் ஆறுகின்றன.