சென்னை: தொப்பை குறைய, கொழுப்பு கரைய, உடல் எடையை குறைக்க என பல விஷயங்களுக்கு பயன்படுகிறது பூசணி விதை. இதை எப்படி சாப்பிட வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
ஆண்கள் மறும் பெண்கள் இருவருக்கும் தொப்பை பிரச்சனை என்பது பொதுவானது. உணவு மாற்றம், குறைந்த உடல் உழைப்பு. ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்வது என பல காரணங்களால் தொப்பை போடுகிறது. அதிலும் அடி வயிறு தொப்பை என்பது மிகவும் சிரமமானது. அது தோற்றத்தையும் கெடுத்து விடும்.
பூசணி விதைகள் தொப்பையை குறைக்க பெரிதும் உதவும் என்பது உங்களுக்கு தெரியுமா? வெயிட் லாஸ் மற்றும் பெல்லி லாஸ் இரண்டுக்குமே பூசணி விதைகள் மிகச் சிறந்த தீர்வு. பூசணி விதைகளில் நார்ச்சத்து, புரதம், வைட்டமின்கள் மற்றும் நிறைவுறா கொழுப்புகள் போன்றவை உள்ளன.
இவை கலோரிகளை எரிக்க பெரிதும் உதவுகின்றன. தாதுக்கள் நிறைந்த பூசணி விதையில் கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், மெக்னீசியம் மற்றும் துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துகளும் உள்ளன. இவை எடை குறைக்க பெரிதும் கைக்கொடுகின்றன. பூசணி விதைகளை சாப்பிட்டால் பசி எடுப்பது குறையும். இதனால் அதிகமாக சாப்பிடுவது தடுக்கப்படும். எடை மற்றும் தொப்பை வர காரணம், அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது.
பூசணி விதைகளை காய வைத்து, அதை மிக்ஸியில் நன்கு பொடியாக்கி வெந்நீரில் காலை வெறும் வயிற்ற்றில் 1 டம்ளர் குடிக்கலாம். வெண்ணெய்யில் சிறிதளவும் பூசணி விதைகளை சேர்த்து வறுத்து, எல்தி ஸ்நாக்ஸாகவும் சாப்பிடலாம்.
காலை குடிக்கும் எல்தி ஸ்மூத்திகளில் பூசணி விதைகளை சேர்த்து அரைத்து குடிக்கலாம். பூசணி விதைகளுடன் பாதாம், சூரிய காந்தி விதை, ஆளி விதை சேர்த்து நன்கு பொடியாக்கி அதை கொதிக்கும் பாலில் கொட்டி இரவில் குடிக்கலாம்.