சென்னை: தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று அண்ணா கல்வி நிறுவனத்தை பார்வையிட்டார். அங்கு கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசினார். அப்போது, அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.
இதையடுத்து, உடனடியாக அவர் ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் பரிசோதித்ததில் அவரது ரத்த அழுத்தம் சீராக இல்லை என தெரியவந்தது. அவருக்கு டாக்டர்கள் தேவையான சிகிச்சை அளித்தனர். சிறிது நேரத்தில் குணமடைந்தார். சில நாட்கள் வீட்டில் ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.