லண்டன் : இங்கிலாந்தில் ஓய்வு பெற்ற முன்னாள் வீரர்கள் விளையாடும் உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜெண்ட்ஸ் 2024 டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. அந்தத் தொடரின் இறுதிப்போட்டியில் யுவராஜ் சிங் தலைமையிலான இந்தியாவும் , யூனிஸ் கான் தலைமையிலான பாகிஸ்தான் அணிகளும் மோதின.
இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது.20 ஓவரில் 6 விக்கெட்களை இழந்து 156 ரன்களை எடுத்தது. பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணியில் அதிகபட்சமாக சோயிப் மாலிக் 41ரன்களையும்,கம்ரான் அக்மல் 24 ரன்களையும் எடுத்தனர்.
இந்தியா சாம்பியன்ஸ் அணியின் அனுரீத் சிங் 43 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தினார். ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய இந்தியா சாம்பியன்ஸ் அணி 19.1 ஓவரில் 5 விக்கெட்களை இழந்து 159 ரன்களை எடுத்து சாம்பியன் பட்டம் வென்றது.
இந்தியா சாம்பியன்ஸ் அணியில் அதிகபட்சமாக அம்பதி ராயுடு 50 ரன்களையும்,குர்கீரத் சிங் மான் 34 ரன்களையும், யூசுப் பதான் 30 ரன்களையும் எடுத்து வெற்றிக்கு உதவினர். ஆட்டநாயகனாக அம்பதி ராயுடுவும், தொடர் நாயகனாக யூசுப் பதானும் தேர்தெடுக்கப்பட்டனர்.