வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக 2021 ஜனவரி 20ஆம் தேதி பொறுப்பேற்ற குடியரசு கட்சியின் டொனால்டு டிரம்ப், அமெரிக்காவுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக, அமெரிக்கப் பொருட்களுக்கு உலக நாடுகள் விதிக்கும் அதே அளவு வரியை, அந்த நாடுகளுக்கு விதிக்க அதிபர் டிரம்ப் முடிவு செய்துள்ளார்.

இந்த அறிவிப்பை ஏப்ரல் 2-ஆம் தேதி வெளியிடுவதாக அவர் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், நேற்று அதிபர் டிரம்ப் கூறியதாவது: “அமெரிக்க வரலாற்றில் இன்று மிக முக்கியமான நாள். இது எங்கள் பொருளாதார சுதந்திரப் பிரகடனம். இன்றைய நாள், அமெரிக்க வரலாற்றில் என்றென்றும் நினைவுகூரப்படும்.”
வேலைவாய்ப்புகள் மற்றும் தொழிற்சாலைகள் நம் நாட்டிற்குள் மீண்டும் வரும் என்று அவர் குறிப்பிட்டார். மேலும், வெளிநாட்டு தயாரிப்பு ஆட்டோமொபைல்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்றும் அறிவித்தார்.
அமெரிக்காவை மேலும் சிறந்த நாடாக மாற்ற பின்பற்றப்படும் இந்த புதிய வரி முறையை உலக நாடுகள் அமெரிக்கப் பொருட்களுக்கு விதிக்கும் அதே அளவில் அமெரிக்கா உபயோகப்படுத்தும் என்று டிரம்ப் தெரிவித்தார்.
பிரிட்டன் மீது, 10 சதவீத வரி விதிக்கப்படும் என்றும் அவர் கூறினார். “அமெரிக்காவை பல ஆண்டுகளாக நட்பு மற்றும் எதிரி நாடுகள் சூறையாடி வந்தன. இனி அது ஒருபோதும் நடக்காது,” என்று அவர் மேலும் கூறினார்.
அதிபர் டிரம்பின் இந்த அதிரடி அறிவிப்பினால், பல்வேறு நாடுகளில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் என்று நம்பப்படுகிறது.