திருவள்ளூர்:
திண்டிவனம் – நகரி அகல ரயில் பாதை திட்டத்துக்காக திருவள்ளூர் மாவட்டத்தில் நிலம் கையகப்படுத்தியதில் இழப்பீடு பெறாதவர்களுக்கான சிறப்பு முகாம் இன்று (15ம் தேதி) முதல் ஆகஸ்ட் 1ம் தேதி வரை நடக்கிறது.
திண்டிவனம் முதல் நகரி வரையிலான அகல ரயில் பாதை திட்டத்திற்காக திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டா, ஆர்.கே.பேட்டை ஆகிய கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு இழப்பீடு கிடைக்காதவர்களுக்கான சிறப்பு முகாம் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலகங்களில் இன்று முதல் ஆகஸ்ட் 1ம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறுகிறது. அதில், இன்று பண்டாரவேடு, நாளை கொளத்தூர், அடுத்த 18ம் தேதி பொதட்டூர்பேட்டை, 19ம் தேதி கொல்லலகுப்பம், 22ம் தேதி பத்மபுரம், 23ம் தேதி பெருமாநல்லூர்-1, 24ம் தேதி பெருமாநல்லூர்-3, 25ம் தேதி பெருமாநல்லூர்-2. 26-ம் தேதி ஆதிவராகபுரம், 29-ம் தேதி வங்கனூர், 30-ம் தேதி கிருஷ்ணமராஜகுப்பம், 31-ம் தேதி சல்நானம்பூடி, ஆகஸ்ட் 1-ம் தேதி மீசரகண்டம் ஆகிய இடங்களில் சிறப்பு முகாம் நடக்கிறது.
இழப்பீடு பெறாத நில உரிமையாளர்கள் கலந்து கொண்டு தங்களின் நிலத்தின் பட்டா, பத்திரம், நில ஆதாரம், வங்கி கணக்கு புத்தகம் மற்றும் ஆதார் அட்டை, பான்கார்டு நகல்களை திண்டிவனம் மாவட்ட சிறப்பு அலுவலரிடம் (நிலம் கையகப்படுத்துதல்) சமர்ப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார். நகர்ப்புற சாலை திட்ட அலுவலர் மற்றும் இழப்பீட்டுத் தொகையைப் பெறுங்கள்.