மங்களூரு: மங்களூருவில் திருட்டு சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் வங்கி லாக்கர்களுக்கு ‘கிராக்கி’ ஏற்பட்டுள்ளது.
தட்சிண கன்னடா, மங்களூரு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வீடுகளை உடைத்து திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. ஒவ்வொரு வாரமும் ஒன்றிரண்டு திருட்டு வழக்குகள் பதிவாகி வருகின்றன.
முதியவர்கள் தனியாக இருக்கும் வீடுகளை குறிவைத்து கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. தாக்கி கொள்ளையடிக்கப்படுவதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
திருட்டுக்கு பயந்து பலர் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள், விலை உயர்ந்த பொருட்களை வீட்டில் வைக்க பயப்படுகிறார்கள். அவை வங்கி லாக்கர்களில் வைக்கப்பட்டுள்ளன. இதனால், வங்கி லாக்கர்களுக்கு ‘கிராக்கி’ ஏற்பட்டுள்ளது. நடுத்தர மற்றும் பெரிய லாக்கர்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது.
தனியார் வங்கிகளின் லாக்கர்களை விட தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், கூட்டுறவு வங்கிகளின் லாக்கர்களில் கட்டணம் குறைவு. எனவே, தேசிய மற்றும் கூட்டுறவு வங்கிகள் புதிய லாக்கர்களை திறந்து அதில் நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் பாதுகாப்பாக வைக்கப்படுகின்றன.
மங்களூருவில் உள்ள எஸ்சிடிசிசி வங்கியின் முதன்மை செயல் அதிகாரி கோபால கிருஷ்ணா கூறியதாவது: கடந்த சில நாட்களாக எங்கள் வங்கியில் புதிய லாக்கர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது உண்மைதான். மக்கள் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை வைத்துள்ளனர்.
தனியாருடன் ஒப்பிடுகையில், எங்கள் லாக்கர்களில் கட்டணம் குறைவாக உள்ளது. முதியவர்கள், வேலைக்குச் செல்லும் தம்பதிகள் அதிக அளவில் வருகின்றனர்.