சென்னை : நடிகர் அர்ஜுனின் இரண்டாவது மகளுக்கும் திருமணம் உறுதியாகி இருக்கிறது.
ஆக்ஷன் கிங் என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் அர்ஜுன். அவரது மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் மற்றும் நடிகர் தம்பி ராமையா மகன் உமாபதி ராமையா ஆகியோர் திரும்ணம் கடந்த வருடம் விமரிசையாக நடைபெற்றது.
இந்நிலையில் தற்போது அர்ஜுனின் இரண்டாவது மகளுக்கும் திருமணம் உறுதியாகி இருக்கிறது.
அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா அர்ஜுன் தற்போது தனது காதலரை அறிமுகப்படுத்தி இருக்கிறார். இத்தாலியில் மொத்த குடும்பமும் இருக்கும்போது நிச்சயம் நடைபெற்று இருக்கிறது.
13 வருடமாக காதலித்தவரை தற்போது கரம் பிடிக்கிறாராம் அவர். இத்தகையுடன் இருந்து ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.