திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விரிவான வளாகப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பக்தர்கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்யும் வகையில் எச்.சி.எல் நிறுவனம் சார்பில் ரூ.200 கோடி, தமிழக அரசு சார்பில் ரூ.100 கோடி என மொத்தம் ரூ.300 கோடியில் இப்பணிகள் நடந்து வருகின்றன.
இதேபோல், பக்தர்கள் தங்குவதற்காக கோயில் கட்டியுள்ள யாத்ரி நிவாஸ் தங்கும் விடுதிகளும் நிறைவடைந்து முடியும் தருவாயில் உள்ளன. இந்நிலையில், இன்று காலை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கோயிலுக்குச் சென்றார்.
அங்கு சுவாமி தரிசனம் செய்த பின், கோவிலில் நடக்கும் விரிவான வளாகப் பணிகள் மற்றும் யாத்ரி நிவாஸ் பணிகளை பார்வையிட்டார். மேலும் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது, இந்து சமய அறநிலையத் துறை அரசு முதன்மைச் செயலர் சந்திரமோகன், ஆணையர் ஸ்ரீதர், மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.