‘கோமாதா’ என்று அழைக்கப்படும் பசுவை வழிபடுவதால் பல நன்மைகளைப் பெற்று நலமுடனும், வளமுடனும் வாழலாம்.
*பசுவின் உடலில் மும்மூர்த்திகளும், முப்பத்து முக்கோடி தேவர்களும், நாற்பத்து எட்டாயிரம் ரிஷிகளும் இருக்கிறார்கள். மேலும் சகலவிதமான தெய்வங்களும், முனிவர்களும், நவகிரகங்களும் இருக்கின்றனர். கோமாதாவின் நான்கு கால்கள் நான்கு வேதங்களாக கருதப்படுகிறது.
*கோமாதா பூஜையின் போது கன்றுடன் சேர்த்துதான் பூஜிக்க வேண்டும். கோமாதாவுக்கு பூஜை செய்தால் சகல செளபாக்கியங்களும் கிடைக்கும். அனைத்துவிதமான தோஷங்களும் நீங்கும்.
*பசுவிற்கு உணவளித்தால் நமது தர்ம வினைகள், சாபங்கள் நீங்கும்.
*எந்த கிரகத்தால் நமக்கு தொல்லைகள், துன்பங்கள் ஏற்படுகிறதோ, அந்தக் கிழமையில் பொங்கல் வைத்து பசுவை வழிபட கிரக பாதிப்புகள் விலகும்.
*வாழைப்பழத்துடன் வெல்லம் சேர்த்து படைத்து வழிபட்டால் பிதுர் தோஷம் நீங்கி புத்திர பாக்கியம் உண்டாகும்.
*பாதியில் கட்ட முடியாமல் இடையூறு வந்து பாதித்த கட்டிடங்களில் பசுவைச் சுற்றி வரச் செய்தால் தடைகள் நீங்கி, நின்ற பணிகள் நிறைவு பெறும்.
*சனி ஆதிக்கத்தால் பாதிக்கப்பட்டோர் சனிக்கிழமை அன்று பசுவுக்கு அகத்திக் கீரை கொடுத்து வந்தால் பாதிப்புகள் குறையும்.
*கோவத்தால் விளையும் தீவினைகள் தீரும். முன் ஜென்ம பாவங்கள் நீங்கும். காலையில் கண் விழித்ததும் பசுவைத் தொழுவது சிறந்தது. மேலும் சுப சகுனமாகவும் அமையும்.
*பசுவை ஒரு முறை சுற்றி வந்தால் உலகம் முழுவதும் சுற்றி வந்த புண்ணியம் கிடைக்கும்.கோமாதாவை வழிபடுவோம். துன்பங்கள் விலகி, வளத்துடன் வாழ்வோம்.