ராமநாதபுரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் மார்கழி மாத பிறப்பையொட்டி நாளை அதிகாலை 3.30 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் நடை டிசம்பர் 16 முதல் ஜனவரி 13 வரை நாளை அதிகாலை 3.30 மணிக்கு திறக்கப்படுகிறது. அதிகாலை 4 மணி முதல் 4.30 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை தரிசனமும், 5.00 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி பூஜையும், தேவாரம், திருவெம்பாவை ஓதுதல், தீபாராதனையும் நடக்கிறது.
காலை 6 மணிக்கு திருவனந்தபுரம் பூஜை, 7.30 மணிக்கு விழா, 10 மணிக்கு கால சாந்தி பூஜை, மதியம் 12 மணிக்கு உச்சி கால பூஜை நடக்கிறது. மதியம் 1 மணிக்கு கோவில் மூடப்படும். மீண்டும் மாலை 3 மணிக்கு கோயில் திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு பொது தரிசனம் தொடங்கும். மாலை 6 மணிக்கு சாயரட்சை பூஜையும், இரவு 8 மணிக்கு அர்த்தஜாம பூஜையும், இரவு 8.30 மணிக்கு பழையாறை பூஜையும் நடக்கிறது.
ராமநாதசுவாமி கோயில் உற்சவ காலங்களிலும், சுவாமி புறப்பாடு காலத்திலும் பூஜை நேரங்கள் மாற்றப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.