வாஸ்து சாஸ்திரத்தின்படி, சப்பாத்தி சுடும்போது, அவற்றை எண்ணக் கூடாது என்றும், அதனால், வீட்டில் பிரச்சனைகள் உருவாகி, பொருளாதார நிலை பலவீனமடையும் என்று ஜோதிடரும், வாஸ்து ஆலோசகருமான பண்டிட் ஹிதேந்திர குமார் சர்மா தெரிவித்துள்ளார்.
”சப்பாத்தி, பூரி, மைதா ரொட்டி ஆகியவை ஒரு சிலரைத் தவிர, பெரும்பாலான நபர்களுக்கு மிகவும் பிடித்த உணவுகளாக இருக்கின்றன. ஆனால், பழைய ரொட்டிகளை சாப்பிட பெரும்பாலானோர் விரும்புவதில்லை. இந்த உணவுகளை சுடச்சுட சாப்பிடவே விரும்புகின்றனர். எனவே, எஞ்சிய ரொட்டிகளை தூக்கிவீசுவதற்கு தயங்குவதில்லை.
வீட்டில் தயாரிக்கும் ரொட்டி அல்லது சப்பாத்தியை மாட்டுக்கு கொடுக்க வேண்டும். பசுக்களுக்கு ரொட்டி அல்லது சப்பாத்தியை கொடுப்பதால், நல்ல கர்ம பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அத்துடன், பசுக்களுக்கு முதலில் ரொட்டி கொடுப்பது உங்கள் கிரகத்தை பலப்படுத்துகிறது. வீட்டில் இருந்த பிரச்சனைகளும் நீங்கும். மாட்டுக்கு ரொட்டி கொடுப்பது நல்லது என்பதைப் போல, கடைசி ரொட்டியை நாய்க்கு கொடுக்க வேண்டும். ஜோதிட சாஸ்திரத்தின்படி, நாய்க்கு ஊட்டுவது நல்ல செயல்களை அதிகரிக்கும்.
ஒரு நபர் கடவுளிடமிருந்து எல்லையற்ற ஆசீர்வாதங்களை பெறுவதோடு, ராகு, கேது, சனியின் தாக்கமும் குறைகிறது. அத்துடன், ஒருவர் மரணமடைந்த வீட்டில் சப்பாத்தி அல்லது ரொட்டி செய்யக் கூடாது. ஒருவர் இறக்கும்போது, வீட்டில் ரொட்டி தயாரித்தால், அது குடும்பத்தில் இருப்பவர்களின் உடல் நலத்திற்கு நல்லதல்ல என்றும், இறந்தவரின் ஆன்மா சாந்தி அடையாது என்பது ஐதீகம்” என்று பண்டிட் ஹிதேந்திர குமார் சர்மா தெரிவித்துள்ளார்.