விழுப்புரம்: விழுப்புரத்தில் உள்ள பா.ஜ.க., அலுவலகத்தில் நேற்று நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-
காங்., ஆதரவு ஊடகங்களின் பொய் பிரசாரத்தை, அரியானா, ஜம்மு – காஷ்மீர் மக்கள் சிந்தித்து வாக்களித்துள்ளனர். ஹரியானாவில் மக்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களித்து பிரதமரின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்களை ஆதரித்தனர்.
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் வழிபாட்டிற்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் சிதம்பரம் நடராஜர் கோயிலில் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை.
துவக்கி வைத்தவர்களால் கோவில் சிறப்பாக நிர்வகிக்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக நடராஜர் கோயிலுக்கு எதிராக சிலர் திட்டமிட்டு தகவல் பரப்பி வருகின்றனர். இது மிகவும் கண்டிக்கத்தக்கது.
சிதம்பரம் நடராஜர் கோவில் வளாகத்தில் தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியதற்கான ஆதாரம் இல்லை. மேலும், வீடியோ எடுத்த ரசிகர் நிர்வாகியை யாரும் தாக்கியதற்கான ஆதாரம் இல்லை.
இதில் யாரும் தேவையில்லாமல் கருத்து தெரிவித்து குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம்.
தமிழகம் முழுவதும் கோவில்களில் வழிபாட்டிற்கு கட்டணம் வசூலிப்பதை கண்டித்து இந்து அமைப்புகள் சார்பில் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு ஹெச்.ராஜா கூறினார்.
பாஜக மாநில துணைத் தலைவர் ஏ.ஜி.சம்பத், செயலாளர் அஸ்வத்தாமன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.