மேஷம்: துணிச்சலான முடிவுகள் எடுத்து வெற்றி பெறுவீர்கள். வெளியுலகில் மதிக்கப்படுவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பீர்கள். உடன்பிறந்தவர்களுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். தொழில், வியாபாரம் சாதகமாக இருக்கும்.
ரிஷபம்: பழைய பிரச்னைகளைத் தீர்ப்பீர்கள். உங்கள் நட்பு வட்டம் விரிவடையும். தாயாருடன் வாக்குவாதம் வந்து நீங்கும். நீண்ட நாட்களாக பார்க்க விரும்பிய ஒருவரை சந்திப்பீர்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். தொழில் வெற்றிகரமாக அமையும்.
மிதுனம்: உங்களைச் சுற்றியுள்ளவர்களில் நல்லவர் யார் என்பதை உணர்வீர்கள். விருந்தினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். அலுவலகத்தில் யாருடைய விஷயத்திலும் தலையிட வேண்டாம்.
கடகம்: எந்த ஒரு காரியத்தையும் செய்து முடிக்க இரண்டு அல்லது மூன்று முறை முயற்சி செய்ய வேண்டியிருக்கும். உறவினர்களும் நண்பர்களும் உங்களிடமிருந்து அதிக உரிமைகளைப் பெறுவார்கள். தொழில், வியாபாரத்தில் கவனம் தேவை.

சிம்மம்: எதிரிகளை சமாளிப்பீர்கள். தம்பதியரிடையே மகிழ்ச்சி நிலவும். விருந்தினர்கள் மற்றும் நண்பர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும். அலுவலகப் பயணங்கள் திருப்திகரமாக இருக்கும். வியாபார விஷயங்களில் விஐபிகளை சந்திப்பீர்கள்.
கன்னி: பழைய நல்ல நிகழ்வுகளை நினைத்து மகிழ்வீர்கள். தம்பதிக்குள் அனுசரித்து போவீர்கள். பிள்ளைகளின் படிப்பில் குழப்பம் ஏற்படும். வியாபாரம் சூடுபிடிக்கும். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.
துலாம்: மறைந்திருக்கும் திறமைகள் வெளிப்படும். சகோதர வகையில் நன்மைகள் உண்டாகும். பிள்ளைகளின் மதிப்பு உயரும். வியாபாரம் செழிக்கும். அலுவலகத்தில் விரும்பிய பதவிக்கு இடமாற்றம் கிடைக்கும்.
விருச்சிகம்: புதிய நபரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். பழைய பிரச்சனை தீரும். தொழில் விஷயமாக பயணம் செய்வீர்கள். அலுவலகத்தில் யாருடனும் பகைமை கொள்ள வேண்டாம்.
தனுசு: குடும்பத்தில் உங்களின் அறிவுரை ஏற்கப்படும். பரம்பரை சொத்து வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். உள்ளூர் விவகாரங்களில் முன்முயற்சி எடுப்பீர்கள். வியாபாரம் லாபகரமாக இருக்கும். அலுவலகத்தில் வீண் விவாதங்களைத் தவிர்ப்பீர்கள்.
மகரம்: எதிர்காலம் குறித்த அச்சம் ஏற்படும். கணவன்-மனைவிக்குள் இருந்த கருத்து மோதல்கள் நீங்கும். வியாபாரத்தில் பாக்கி வசூலிப்பீர்கள். அலுவலகத்தில் பொறுப்பு அதிகரிக்கும். உங்களின் கடின உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும்.
கும்பம்: உங்களின் சிந்திக்கும் திறன் அதிகரிக்கும். சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் நிலவும். உங்கள் பிள்ளைகளின் ஆரோக்கியம் சீராக இருக்கும். வியாபாரம் செழிக்கும். அலுவலகத்தில் மரியாதை பெறுவீர்கள்.
மீனம்: சில பணிகளை கம்பீரமாகப் பேசி முடிப்பீர்கள். சகோதரர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். தொழில் ரீதியாக பயணம் மேற்கொள்வீர்கள். அலுவலகத்தில் யாரையும் குறை சொல்ல வேண்டாம்.