தஞ்சாவூர்: மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான கஞ்சனூர் கற்பகாம்பாள் சமேத அக்னீஸ்வர் சுவாமி கோயிலில் உலக நலன் வேண்டி 30ம் ஆண்டு குத்துவிளக்கு பூஜையில் 108 பெண்கள் பங்கேற்று சிறப்பு பூஜை செய்தனர்.
கோயில் அலங்கார மண்டபத்தில் அம்பாள் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளி அருள் பாலித்தார். குத்துவிளக்கு பூஜைகள் பங்கேற்ற பெண்களுக்கு ஆடுதுறை பேரூராட்சி கவுன்சிலர் கோ. சி. இளங்கோவன், கும்பகோணம் பரஸ்பர சகாய நிதியில் லிமிடெட் இயக்குனர் அம்பிகா, திருப்பனந்தாள் ஒன்றிய குழு முன்னாள் துணைத் தலைவர் அண்ணாதுரை ஆகியோர் புடவை மற்றும் பூஜை பொருட்களை வழங்கி தொடங்கி வைத்தனர்.
கண்ணப்ப சிவாச்சாரியார், பாலா சிவாச்சாரியார் ஆகியோர் பூஜைகளை செய்வித்தனர். ஏற்பாடுகளை தங்க நடராஜன் தலைமையில் விழா குழுவினர் செய்திருந்தனர்.