ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்தார். டில்லியில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் இந்த நடவடிக்கையைப் பற்றி முழுமையான விளக்கம் அளிக்கப்பட்டது. பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், அனைத்து கட்சி தலைவர்களும் பங்கேற்றனர்.
அவர்கள் ராணுவத்தின் தாக்குதல்களை பாராட்டியதுடன், தொடர்ந்து ஆதரவு வழங்கத் தயாராக இருப்பதாக தெரிவித்தனர்.நிருபர்களிடம் பேசிய கிரண் ரிஜிஜூ, அப்பாவி மக்கள்மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை தொடரும் என கூறினார். ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடிக்கப்படவில்லை என்றும், இது ஒரு தீர்மானமான நடவடிக்கை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் எல்லை பகுதிகளில் ராணுவம் தொடர்ந்து கண்காணிப்பு நடத்தி வருகிறது.இந்த நடவடிக்கைகள் எதிர்கால தாக்குதல்களைத் தடுக்க குறிக்கோளாகும். பாதுகாப்பு ஆலோசனைகளும், உளவுத்துறை தகவல்களும் அடிப்படையாகக் கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளன. அனைத்து கட்சிகளும் ஒருமித்த ஆதரவை வழங்கி வருகின்றன.
ராணுவம் மற்றும் அரசாங்கம் ஒரே குழுவாக செயல்படுகிறது. நாட்டின் முழு ஆதரவு ராணுவத்துடன் இருப்பதை அதிகாரிகள் உறுதிபடுத்தினர்.பாகிஸ்தானால் வளர்க்கப்படும் பயங்கரவாதிகளுக்கு எதிராக தொடக்கப்பட்ட இந்த ஆபரேஷன், கடைசி வரை தொடரும் என்று கிரண் ரிஜிஜூ உறுதி செய்தார். இந்த நடவடிக்கை முடிவுக்கு வராத நிலையில், எதிரிகள் மீதான எதிர்வினைகள் தொடரும் எனவும் கூறினார். தேசிய பாதுகாப்பு ஒரு முன்னுரிமை என மத்திய அரசு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.