சென்னை. : இன்று கிருஷ்ண ஜெயந்தி விழாவை பக்தர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.
கிருஷ்ண ஜெயந்தியின் நாயகரான கிருஷ்ணர் தலையில் மயில் இறகு இருக்கும் ரகசியம் பற்றி உங்களுக்கு தெரியுமா?
வனவாசத்தின் போது, தாகத்தால் தவித்த சீதைக்கும், ராமருக்கும் மயில் ஒன்று உதவ முன்வந்தது. நீர் இருக்கும் இடம் வெகுதூரம் என்பதாலும், அடர்ந்த காடு என்பதாலும், அவர்கள் வழி தவறி போய்விட கூடாது என்பதற்காக தனது இறகை உதிர்த்துக் கொண்டே சென்றது மயில்.
நீர் நிலையை ராமர் அடைந்த போது, மயில் இறந்து கிடப்பதை பார்த்தார். அதன் தியாகத்திற்காக, கிருஷ்ணர் அவதாரத்தில் தலையில் மயிலிறகை சூடிக் கொண்டார் என்பது ஐதீகம்.
இன்று கிருஷ்ணர் பிறந்த நாளை ஒட்டி அனைத்து கிருஷ்ணர் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் அபிஷேக ஆராதனைகள் நடந்து வருகின்றன.