திருமலை: திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் புதிய தலைவராக பொல்லினேனி ராஜகோபால் நாயுடுவை நியமித்து ஆந்திர அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கோயிலுக்கு 24 அறங்காவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர் ஆந்திராவில் இருந்து 3 எம்எல்ஏக்கள், தெலுங்கானாவில் இருந்து 5 எம்எல்ஏக்கள், கர்நாடகாவில் இருந்து 3 எம்எல்ஏக்கள், தமிழகத்தில் இருந்து 2 எம்எல்ஏக்கள், குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் இருந்து தலா ஒரு எம்எல்ஏ ஆகியோர் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் மத்திய அமைச்சர் பனபாகா லட்சுமி, உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி எச்.எல்.துத்து, பாரத் பயோடெக் இணை நிறுவனர் சுசித்ரா எல்லா ஆகியோரும் வாரிய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஆந்திர மாநிலத்தில் ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜக சார்பில் மேலும் ஒருவர் விரைவில் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அறிவிப்பால் தேவஸ்தானத்திற்கான புதிய போர்டு குறித்த யூகங்கள் கடந்த சில நாட்களாக ஓய்ந்துள்ளன.