நாகப்பட்டினம்: பிரசித்தி பெற்ற வேளாங்கண்ணி மாதா பேராலய திருவிழாவை முன்னிட்டு வேளாங்கண்ணிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாகை மாவட்டத்தில் அமைந்துள்ளது வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா ஆலயம். இந்த ஆலயத்தில் ஆண்டு திருவிழா மிகவும் சிறப்பாக நடப்பது வழக்கம். இந்த திருவிழாவில் பங்கேற்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலத்தை சேர்ந்த பக்தர்கள் வருகை தருவார்கள்.
ஆண்டுதோறும் நடக்கும் இந்த திருவிழா வரும் 28ஆம் தேதி முதல் தொடங்குகிறது.அதனை முன்னிட்டு, சிறப்பு பேருந்துகள் வருகிற ஆக. 28ம் தேதி முதல் செப்.9ம் தேதி வரை சென்னை, திண்டுக்கல், மதுரை, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், பூண்டி மாதாகோவில், சிதம்பரம், புதுச்சேரி, பட்டுக்கோட்டை, திருவாரூர், நாகை, காரைக்கால் ஆகிய முக்கிய ஊர்களிலிருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.