திருமலை: ஆந்திர மாநிலம் அமராவதியில் முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
நெய்யில் கலப்படம் செய்ததாகக் கூறி பால் பண்ணைகள் திருப்பி அனுப்பப்பட்டன. ஆனால் அதற்கு முன்னதாகவே சுவாமிக்கு 6 டேங்கர் நெய் தயார் செய்து பயன்படுத்தியதால், ஆகம ஆலோசகர்களுடன் ஆலோசித்து பிழையை சரிசெய்தனர்.
அதன்படி, நாளை (இன்று) காலை 6 மணி முதல் 10 மணி வரை கோயிலில் உள்ள தங்கக் கிணறு அருகே உள்ள மண்டபத்தில் சிறப்பு தோஷ நிவர்த்தி சாந்தி யாகம் நடைபெறுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
* சிறப்பு விசாரணைக்காக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழங்கப்படும் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலந்திருப்பது குறித்து விசாரிக்க உத்தரவிடக் கோரி இந்து சேனா தலைவரும் விவசாயியுமான சுர்ஜித் சிங் யாதவ் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், “பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டுகளில் நெய்க்குப் பதிலாக விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்துவது இந்து மதத்தை அவமதித்து புண்படுத்தியுள்ளது. இது குறித்து சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.