தஞ்சாவூர்: தீபாவளி பண்டிகை ஒட்டி, . தஞ்சை பெரியக்கோவிலில் பெருவுடையாருக்கு பால், சந்தனம் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்றது.
ஏராளமானவர்கள் புத்தாடை உடுத்தி குடும்பத்துடன் வந்து நீண்ட வரிசையில் நின்று பெருவுடையார் மற்றும் பிரஹன்நாயகியை வழிப்பட்டனர். தீபாவளி பண்டிகையை ஒட்டி, தஞ்சை பெரியக்கோவிலில் எழுந்தருளி இருக்கும் பெருவுடையாருக்கு விபூதி, மஞ்சள் பொடி, திரவியப்பொடி, தேன், பஞ்சாமிர்தம், இளநீர், பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்றது.
பின்னர் மலர்களால் பெருவுடையாருக்கு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஏராளமானவர்கள், புத்தாடை உடுத்தி குடும்பத்துடன் வந்து நீண்ட வரிசையில் நின்று பெருவுடையார் மற்றும் பிரஹன்நாயகியை வழிப்பட்டனர்.