மேஷம்: பொலிவான முகத்துடன் காணப்படுவீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைகட்டும். உங்கள் அன்புக்குரியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் புதிய பொருட்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் உயர்வு இருக்கும்.
ரிஷபம்: குறை கூறியவர்கள் வந்து பேசுவார்கள். வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். உங்கள் பங்குதாரர் உங்களுக்கு ஆதரவளிப்பார். அலுவலகத்தில் சக ஊழியர்களிடையே உங்கள் நற்பெயர் உயரும்.
மிதுனம்: வெளியுலகில் புதிய அனுபவத்தைப் பெறுவீர்கள். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களின் ஆலோசனையைப் பின்பற்றவும். அலுவலகத்தில் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.
கடகம்: எளிதில் முடியும் என்று நினைத்த காரியங்கள் கூட இழுபறியில் முடியும். உங்கள் குழந்தைகளின் செயல்பாடுகளைக் கவனியுங்கள். உத்தியோகத்தில் தேவையற்ற அலைச்சல் இருக்கும். தொழிலை விரிவுபடுத்துவீர்கள்.
சிம்மம்: தள்ளிப்போன சில பணிகளை முடிப்பீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகம் ஆவார்கள். கூட்டாளிகளின் ஆலோசனையை ஏற்கவும். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.
கன்னி: முக்கிய பிரமுகர்கள் அறிமுகம் செய்யப்படுவார்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். தொழிலை விரிவுபடுத்த வங்கிக் கடன் கிடைக்கும். பணியிடத்தில் உங்கள் கோரிக்கைகள் மற்றும் ஆலோசனைகள் ஏற்றுக்கொள்ளப்படும்.
துலாம்: மன பிரச்சனைகள் தீர்ந்து தெளிவு ஏற்படும். தாயின் சோர்வு நீங்கும். கடன்களை தீர்க்க உதவிகள் கிடைக்கும். தொழிலில் அதிரடி மாற்றங்களை செய்து லாபம் அடைவீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்கள் உங்களை மதிப்பார்கள்.
விருச்சிகம்: பழைய பிரச்சனைகளுக்கு குடும்பத்தினருடன் ஆலோசனை செய்து முக்கிய தீர்வு காண்பீர்கள். தொழில் ரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். உங்களின் மேலதிகாரிகள் வேலையில் உங்கள் நட்பை விரிவுபடுத்துவார்கள்.
தனுசு: மனரீதியான பிரச்சனைகள் தீர்ந்து தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். வெளி வட்டாரத்தில் உங்கள் நற்பெயர் அதிகரிக்கும். தம்பதிகளிடையே நெருக்கம் அதிகரிக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பீர்கள்.
மகரம்: சொத்து பிரச்சனைகளை இப்போது கையில் எடுக்க வேண்டாம். குடும்பத்தில் குழப்பம் ஏற்படும். நண்பர்கள் உங்களை புறக்கணிப்பார்கள். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.
கும்பம்: விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். வீடு பராமரிப்பு பணிகளை தொடங்குவீர்கள். நண்பர்கள் உதவுவார்கள். ஆன்மிகம் அதிகரிக்கும். வியாபாரத்தில் போட்டி குறையும். தொழிலில் மேன்மை உண்டாகும்.
மீனம்: எதிர்பாராத பயணங்களால் ஆதாயம் உண்டாகும். முக்கிய பிரமுகர்களின் நட்பைப் பெறுவீர்கள். தம்பதிகளிடையே இருந்த பிரச்சனைகள் நீங்கும். அரசு காரியங்கள் விரைந்து முடிவடையும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பீர்கள்.