மேஷம்: அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பைப் பெறுவீர்கள். பழைய நண்பர்கள் வந்து பேசுவார்கள். வியாபாரத்தில் புதிய பொருட்களை வாங்குவீர்கள். பணியிடத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகும்.
ரிஷபம்: பிள்ளைகளிடம் கோபத்தை காட்டாதீர்கள். அக்கம்பக்கத்தினரிடம் அளவோடு பேசுங்கள். தொழிலில், பணியாளர்கள் சிரமத்தை ஏற்படுத்துவார்கள். அலுவலகத்தில் நீங்கள் எதிர்பார்த்த முக்கியமான ஆவணம் கிடைக்கும்.
மிதுனம்: அழகாகப் பேசி அனைவரையும் கவர்வீர்கள். தாயாரின் உடல்நிலை சீராகும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். மாணவர்கள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். தொழில், வியாபாரம் சாதகமாக இருக்கும்.
கடகம்: கல்வித் தகுதியை உயர்த்துவீர்கள். அறிஞர்களின் நட்பைப் பெறுவீர்கள். சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். சிலருக்கு அலுவலகத்தில் பெரிய பொறுப்பு கிடைக்கும். வியாபாரத்தில் போட்டி குறையும்.

சிம்மம்: புதிய யோசனைகளால் உங்களைச் சுற்றியுள்ளவர்களை ஆச்சரியப்படுத்துவீர்கள். பாதியில் நின்ற பணிகள் முடிவடையும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலக நோக்கத்திற்காக பயணம் மேற்கொள்வீர்கள்.
கன்னி: வீட்டில் உள்ள பழைய பொருட்களை மாற்றுவீர்கள் வருமானம் அதிகரிக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகளின் ஆலோசனைகளைக் கேளுங்கள்.
துலாம்: தனிப்பட்ட அளவில் துணிச்சலாக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். நீங்கள் தொட்ட காரியங்கள் துலங்கும். வெளி உலகில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். வியாபாரம் சூடுபிடிக்கும். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.
விருச்சிகம்: புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். தாயாரின் உடல்நிலை சீராகும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு ஏற்படும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுடன் நட்பு கொள்வீர்கள். வியாபாரத்தில் ஏற்றம் காண்பீர்கள்.
தனுசு: திட்டமிட்ட வேலைகளை போராட்டத்துடன் முடிப்பீர்கள். குடும்பத்தில் சிறுசிறு கருத்து மோதல்கள் வரலாம். அலுவலகத்தில் சக ஊழியரைப் பற்றி தலைவரிடம் புகார் செய்ய வேண்டாம். வியாபாரம் லாபகரமாக இருக்கும்.
மகரம்: பிரபலங்களின் சிறப்பு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் பொருட்கள் விற்கப்படும். உத்தியோக நோக்கங்களுக்காக பயணம் மேற்கொள்ள நேரிடும்.
கும்பம்: பல காரியங்களை உரிய நேரத்தில் புத்திசாலித்தனமாக செய்து முடிப்பீர்கள். பழைய கடன்களை அடைப்பீர்கள். உறவினர்கள் மத்தியில் உங்கள் நற்பெயர் உயரும். வியாபாரம் சூடுபிடிக்கும். அலுவலகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும்.
மீனம்: மன உளைச்சல் நீங்கி தெளிவு பெறுவீர்கள். புதிய நண்பர்களின் சந்திப்பால் உற்சாகமாக இருப்பீர்கள். வியாபாரத்தில் போட்டி குறையும். உத்தியோகத்தில் விரும்பிய பதவிக்கு இடமாற்றம் கிடைக்க வாய்ப்பு உண்டு.