மேஷம்பணம் வருவதற்கான புதிய வழிகளைத் தேடி முன்னேறுவீர்கள். குடும்பத்தில் புதிய நட்புகளால் சிக்கல்களை எதிர்கொள்வீர்கள். மேஷம் (Aries)
நீங்கள் பல வழிகளில் பணம் பெறும் வழிகளை உருவாக்குவீர்கள். ஆனால் புதிய நட்புகள் குடும்பத்தில் பிரச்சனையை உருவாக்கலாம். வேலை செய்பவர்களுக்கு மிகுந்த நம்பிக்கை தேவை. தொழிலில், குறிப்பாக எலக்ட்ரிக் சம்பந்தப்பட்ட துறையில் முன்னேற்றம் காண்பீர்கள். ஏற்றுமதி தொழிலில் சாதகமான பலனை அடைவீர்கள்.
அதிர்ஷ்ட நிறங்கள்: சிவப்பு, சாம்பல்
அதிர்ஷ்ட எண்கள்: 9, 7, 6, 1
ரிஷபம் (Taurus)
தொழிலில் எதிர்ப்புகளை சமாளித்து முன்னேறுவீர்கள். புதிய வீட்டிற்கு ஏற்பாடுகள் செய்யும் நேரம் வந்துள்ளது. குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடைபெறும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து மகிழ்ச்சியான சூழலை ஏற்படுத்துவீர்கள்.
அதிர்ஷ்ட நிறங்கள்: வெள்ளை, சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 6, 1, 2, 9
மிதுனம் (Gemini)
வியாபாரத்தில் சிறிய சிக்கல்கள் ஏற்படும். வெளிநாட்டு வாய்ப்புகள் கிடைக்கும். புதிய முயற்சிகளை ஆரம்பித்து வெற்றி பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்றுக் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறங்கள்: பச்சை, கருப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9, 4, 3
கடகம் (Cancer)
பிரிந்த குடும்பங்கள் மீண்டும் ஒன்றாகும். வீடு மற்றும் நிலங்களில் முதலீடு நல்ல பலனைத் தரும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண வாய்ப்பு அதிகம். அரசு ஊழியர்கள் விருது போன்ற சிறப்புகள் பெறுவார்கள்.
அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 3, 8, 5
சிம்மம் (Leo)
மனநிம்மதி குறைந்திருக்கும். தொழிலில் நிதானமாக செயல்பட வேண்டும். கூட்டுத் தொழிலில் எதிர்பார்த்த வருமானம் கிடைக்காமல் போகலாம். நியாயத்துக்கு புறம்பாக செயல்படாதீர்கள்.
அதிர்ஷ்ட நிறங்கள்: சாம்பல், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 7, 6
கன்னி (Virgo)
தொழில் மற்றும் முதலீட்டில் சாதகமான பலனை எதிர்பார்க்க முடியாது. குடும்ப உறவில் புரிதல் தேவை. பங்குச் சந்தை போன்றவற்றில் ஈடுபடாமல் இருப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறங்கள்: பச்சை, சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 5, 1, 2, 9
துலாம் (Libra)
பண வரவு அதிகரிக்கும். தொழிலில் சிக்கல்களை முறியடித்து வெற்றி காண்பீர்கள். புதிய தொடர்புகள் மற்றும் வட்டாரங்களின் செல்வாக்கு உயரும்.
அதிர்ஷ்ட நிறங்கள்: சிவப்பு, கருப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9, 4, 3
விருச்சிகம் (Scorpio)
உடல்நிலையை சீராக வைத்துக் கொள்ள வேண்டிய நாள். தொழிலில் முன்னேற்றம் பெறுவீர்கள். புதிய முதலீடுகளுக்கான நல்ல சாத்தியங்கள் உண்டு.
அதிர்ஷ்ட நிறங்கள்: சிவப்பு, கருநீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 9, 3, 8, 5
தனுசு (Sagittarius)
பொருளாதார நிலை முன்னேறும். குடும்ப விவகாரங்களில் சற்று சிக்கலாக இருக்கலாம். உங்கள் அறிவுத்திறனைச் செலுத்தி நல்ல முடிவுகளை எடுப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், சாம்பல்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 7, 6, 1
மகரம் (Capricorn)
இன்று சந்திராஷ்டமம். நிதானமாக செயல்படுவது அவசியம். கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் அதிக கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறங்கள்: கருநீலம், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 8, 1, 2
கும்பம் (Aquarius)
குடும்பத்தில் மகிழ்ச்சி காண்பீர்கள். தந்தையின் உடல்நிலையில் கவனம் செலுத்துங்கள். அரசு ஊழியர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறங்கள்: கருப்பு, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 8, 9, 4
மீனம் (Pisces)
வியாபாரத்தில் சிறு சிக்கல்களை அகற்றி லாபம் காண்பீர்கள். அரசுத்துறை ஊழியர்களுக்கு நல்ல முன்னேற்ற வாய்ப்பு உள்ளது.
அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 8, 5