மேஷம்
உங்கள் செல்வாக்கைத் தக்க வைத்துக் கொள்ள போராடுவீர்கள். மனைவியுடன் சண்டை போடாதீர்கள். உங்கள் மரியாதையை இழப்பீர்கள். பொருளாதார நெருக்கடியால் கடன் வாங்குவீர்கள். காதல் வலை வீசும் பெண்களிடம் ஏமாறாதீர்கள். சிலருக்கு சிறுநீரக கோளாறுகள் ஏற்பட்டு வலியால் அவதிப்படுவார்கள். சிறு விபத்துகளில் சிக்குவீர்கள். அதிர்ஷ்ட நிறங்கள்: சிவப்பு, சாம்பல், வெள்ளை, வெளிர் சிவப்பு. அதிர்ஷ்ட எண்: 9 7 6 1
ரிஷபம்
வியாபாரத்தில் திடீர் பின்னடைவை சந்திப்பீர்கள். உங்களுடன் இருந்தவர் உங்களை ஏமாற்றி விட்டுச் செல்லக்கூடிய நிலையில் நீங்கள் இருப்பீர்கள். இனிமையாகப் பேசி பல்லைக் காட்டிப் பேசும் பெண்களைக் கண்டு ஏமாறாதீர்கள். உறவினர்கள் மத்தியில் உங்கள் அந்தஸ்து கெட்டு, அவமானத்தால் தலைகுனிவீர்கள். தேவைக்காக வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தவிப்பீர்கள். அதிர்ஷ்ட நிறங்கள்: வெள்ளை, வெளிர் சிவப்பு, சிவப்பு. அதிர்ஷ்ட எண்: 6 1 2 9
மிதுனம்
அரசாங்க உத்தியோகஸ்தர்கள் அதிர்ஷ்டமான நிகழ்வுகளை அனுபவித்து மகிழ்ச்சியாக வாழ்வார்கள். பொருளாதாரம் மேம்படும், புகழும் செல்வாக்கும் பெறுவீர்கள். வயிற்றுப் பிரச்சனைகளுக்கு அறுவை சிகிச்சை செய்து கொள்வீர்கள். புதிய வீடு வாங்குவீர்கள். உங்கள் கடையை விரிவுபடுத்துவீர்கள். நீங்கள் வீசிய காதல் வலையில் வெற்றி பெறுவீர்கள். அதிர்ஷ்ட நிறங்கள்: பச்சை, கருப்பு, மஞ்சள். அதிர்ஷ்ட எண்கள்: 5 9 4 3
கடகம்
அரசியல்வாதிகளுக்கு மக்களிடம் செல்வாக்கு அதிகரிக்கும். மற்றவர்களுக்கு உதவுவதன் மூலம் உறவினர்கள் மத்தியில் மரியாதை பெறுவீர்கள். விரும்பிய பெண் கிடைப்பதில் வெற்றி பெறுவீர்கள். கடினமாக உழைத்து சேமிப்பை அதிகரிப்பீர்கள். நல்லவேளையாக சிலர் அரசு வேலையில் சேருவார்கள். அதிர்ஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள், அடர் நீலம், பச்சை. அதிர்ஷ்ட எண்கள்: 2 3 8 5
சிம்மம்
உங்களின் எதிரிகள் திட்டமிட்டு உங்களை வீழ்த்த முயன்றாலும் அதை முறியடிப்பீர்கள். வயிற்றுப் பிரச்சனைகளுக்காக கணிசமான மருத்துவச் செலவுகளைச் சந்திப்பீர்கள். காதல் விவகாரங்களில் கவனமாக இருக்காவிட்டால் பஞ்சாயத்தில் சிக்கிக் கொள்வீர்கள். செக் பவுன்ஸ் ஆன பிரச்சனைக்காக காவல் நிலையம் செல்வீர்கள். அதிர்ஷ்ட நிறங்கள்: வெளிர் சிவப்பு, சாம்பல், வெள்ளை. அதிர்ஷ்ட எண்: 176
கன்னி
தொழிலில் புதிய முயற்சிகளை மேற்கொண்டால் பண நஷ்டம் ஏற்படும். அரசியல்வாதிகள் சட்டச் சிக்கலில் சிக்குவார்கள். வியாபாரத்தில் கடும் போட்டியை சந்திப்பீர்கள். உறவினர்கள் மத்தியில் உங்கள் செல்வாக்கு குறையும். வெளியூர் பயணத்தின் போது உடமைகளை கவனமாக கையாள தவறாதீர்கள். சந்திராஷ்டமம். கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெளிர் சிவப்பு, வெள்ளை, சிவப்பு. அதிர்ஷ்ட எண்: 5 1 2 9
துலாம்
திடீர் பணவரவால் திகைப்பீர்கள். மருத்துவர்கள், வழக்கறிஞர்களுக்கு மக்கள் மத்தியில் மரியாதை அதிகரிக்கும். நீங்கள் விரும்பும் பெண்ணை வசீகரமான வார்த்தைகளால் வசீகரிப்பீர்கள். வியாபாரிகள் தங்கள் விற்பனையை அதிகரித்து பொருளாதாரத்தை உயர்த்துவார்கள். ஆடம்பரமாக செலவு செய்து அந்தஸ்தை உயர்த்துவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு, கருப்பு, பச்சை. அதிர்ஷ்ட எண்: 6 9 4 3
விருச்சிகம்
நடனம், பாடல் உட்பட அனைத்து துறைகளிலும் வெற்றி பெறுவீர்கள். வாகனங்களில் செல்லும்போது கவனமாக பயணிக்க மறக்காதீர்கள். விபத்தில் சிக்கி ரத்த காயம் அடைவீர்கள். தொழிலில் வெற்றி பெறுவீர்கள். கடனை அடைப்பீர்கள். உங்களின் செழுமையான பேச்சு காதலில் முறிவை உண்டாக்கும், நீங்கள் விரும்பும் பெண் உங்களை விட்டு விலகும். அதிர்ஷ்ட நிறங்கள்: சிவப்பு, மஞ்சள், பச்சை, அடர் நீலம். அதிர்ஷ்ட எண்: 9 3 8 5
தனுசு
உங்களுக்கு கவலை மற்றும் தூக்கக் கலக்கம் அதிகரிக்கும். ஒழுங்கீனமாகச் செயல்பட்டு வழிதவறிச் செல்வீர்கள். நீங்கள் விரும்பும் பெண்ணுக்காக நிறைய பணம் செலவழிப்பீர்கள். தொழிலில் உள்ள சூழ்நிலையை யோசிப்பீர்கள். நீங்கள் திடீரென்று நோய்வாய்ப்பட்டு உங்கள் குழந்தைகளை மருத்துவமனையில் சேர்ப்பீர்கள். வெளியே செல்லும்போது வீட்டைப் பூட்ட மறக்காதீர்கள். அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், சாம்பல், வெள்ளை, வெளிர் சிவப்பு. அதிர்ஷ்ட எண்: 3 7 6 1
மகரம்
உங்கள் வாழ்வில் வசந்தம் வீசுவது போல் மகிழ்ச்சியாக நடப்பீர்கள். பெண்களின் மயக்கும் வார்த்தைகளால் நீங்கள் மயங்குவீர்கள். அனைத்து துறைகளிலும் உங்கள் செல்வாக்கை அதிகரிப்பீர்கள். வியாபாரப் போட்டிகளை அழிப்பீர்கள். உங்கள் பேச்சைக் கேட்காத உறவுகளை ஒதுக்கித் தள்ளுவீர்கள். உங்கள் உடலில் இருந்து ஒரு கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றுவீர்கள். அதிர்ஷ்ட நிறங்கள்: அடர் நீலம், வெளிர் சிவப்பு, வெள்ளை, சிவப்பு. அதிர்ஷ்ட எண்: 8 1 2 9
கும்பம்
ஊர் மக்கள் மத்தியில் உங்கள் பெயர் பறக்கும் வகையில் நடந்து கொள்வீர்கள். தொழிலில் கிடைக்கும் லாபத்தில் வீடு வாங்குவீர்கள். நீண்ட நாட்களாக நினைத்துக் கொண்டிருந்த பெண்ணின் இதயத்தில் நிரந்தரமாக இடத்தைப் பிடிப்பீர்கள். சொத்தில் பங்கு கேட்டு சொந்த சகோதரன் ஆரம்பித்த சண்டைக்கு தீர்வு காண்பீர்கள். தங்க நகைகள் வாங்கி மனைவிக்கு மகிழ்ச்சியைத் தருவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெள்ளை, கருப்பு, மஞ்சள். அதிர்ஷ்ட எண்: 8 9 4 3
மீனம்
தொட்டதெல்லாம் தடையின்றி செய்து மகிழ்ச்சியில் திளைப்பீர்கள். உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உங்களின் அந்தஸ்து உயரும், மற்றவர்களால் போற்றப்படுவீர்கள். தேவைப்படும் நேரத்தில் நெருங்கிய பெண் நண்பரிடம் இருந்து நிதி உதவி பெறுவீர்கள். சகோதரியின் திருமண ஏற்பாடுகளைச் செய்வீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், பச்சை. அதிர்ஷ்ட எண்: 3 8 5