மேஷம் – குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறையும். விரும்பும் பெண்ணிடம் துணிவுடன் உணர்வுகளை வெளிப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட சிக்கல்களைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். புதிய நண்பர்களிடம் தொழில் ரகசியங்களை பகிர வேண்டாம். தாயாரின் உடல்நலக் குறைபாடுகள் குறித்து மருத்துவ ஆலோசனை பெறுவீர்கள். பிறருக்கு உதவியாக இருந்து உங்கள் மதிப்பை உயர்த்துவீர்கள்.

ரிஷபம் – எதிர்பார்த்த செயலில் ஏமாற்றம் ஏற்படலாம். ஆனால் கலைத்துறையினர் முன்னேற்றம் காண்பீர்கள். அரசு வேலை வாய்ப்பு ஏற்படும். பிள்ளைகளின் நடத்தை சில சங்கடங்களை ஏற்படுத்தலாம். சிறு வியாபாரிகளுக்கு நல்ல லாபம். உறவுகளில் தகராறு ஏற்படக்கூடும்.
மிதுனம் – நீண்ட நாள் காத்திருந்த பதவி உயர்வு கிடைக்கும். உடல் நலக்குறைவுகள் தீரும். இழுபறியாக இருந்த வேலைகள் சாதகமாக முடிவடையும். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். நிலம் வாங்கும்/விற்கும் வியாபாரத்தில் வெற்றி. காதலில் கனிவுடன் நடந்து வெற்றி காண்பீர்கள்.
கடகம் – வம்புகள் தவிர்க்கவேண்டும். விருப்பமில்லாத இடத்திற்கு மாற்றம் ஏற்படலாம். பிள்ளைகளின் எதிர்கால கல்வி பற்றி கவலை ஏற்படும். வாடிக்கையாளர் ஒப்பந்தங்களில் தாமதம். மனைவியின் கோபம் குறையும். அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெறுவீர்கள்.
சிம்மம் – தாமதமான வேலைகள் வேகமாக நடைபெறும். புதிய வீடு கட்டுவீர்கள் அல்லது பழைய வீடு புதுப்பிக்கப்படும். காண்ட்ராக்ட் தொழிலில் லாபம் கிடைக்கும். வங்கி கடன் கிடைக்கும். புதிய தொழில் தொடங்க முடியும். தொழிலாளர்களுக்கு அதிக உழைப்பால் லாபம்.
கன்னி – பிறர் பிரச்சனைகளுக்கு தீர்வாக இருப்பீர்கள். ஆனால் உங்கள் விஷயங்களில் கவனம் தேவை. உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். குடும்ப விவகாரங்களில் நுட்பமாக நடந்து கொள்வீர்கள். உறவுகளில் சிக்கல்கள் ஏற்படலாம். காதலில் நிதானம் தேவை.
துலாம் – பணியாளர் பற்றாக்குறை காரணமாக அதிக வேலையைச் செய்வீர்கள். வியாபாரம் மந்தமாகும். தொழிற்சாலையில் உற்பத்தி பாதிக்கப்படும். காதலியில் இருந்து ஆதரவு பெறுவீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். திருமண முயற்சி சீராக நடைபெறும்.
விருச்சிகம் – வாகன பழுது மற்றும் செலவுகள் ஏற்படும். வீடு கட்டும் திட்டத்தில் சிரமம். ரியல் எஸ்டேட் மற்றும் ஆன்லைன் வியாபாரத்தில் கவனம் தேவை. பணியாளர்களின் பிழைகள் சிக்கல்களை தரும். தவறான வாக்குறுதிகள் தவிர்க்க வேண்டும்.
தனுசு – சிறு வியாபாரிகள் அதிக லாபம் அடைவீர்கள். அரசு ஊழியர்கள் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். கலைத்துறையில் புகழ் கிடைக்கும். மனைவியின் ஆதரவால் தொழிலில் வெற்றி. மறைமுக எதிரிகளை சமாளித்து வியாபாரத்தை விரைவில் வளர்த்துவிடுவீர்கள்.
மகரம் – திருமண நிகழ்வுகள் தடையின்றி நடைபெறும். நண்பர்களிடம் தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம். உறவினர்களிடம் மதிப்பை உயர்த்துவீர்கள். பார்ட்னர்ஷிப் பத்திரங்களில் கவனம் தேவை. பிள்ளைகள் பெருமையைத் தருவார்கள்.
கும்பம் – வியாபார முடிவுகளில் அவசரம் காட்டாதீர்கள். அரசு வேலையில் குற்றச்சாட்டு வந்தாலும் தைரியமாக எதிர்கொள்வீர்கள். தனியார் துறையில் மன அழுத்தம் அதிகரிக்கும். வெளியூர்ப் பயணங்கள் ஒத்திவைக்க வேண்டும். இன்று நிதானமாக செயல்பட வேண்டும்.
மீனம் – குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். பெண்கள் புதிய நண்பர்களைச் சந்திப்பார்கள். மாணவர்கள் கல்வியை மீண்டும் தொடங்குவார்கள். அலைச்சல் இருந்தாலும் ஆர்டர்கள் கிடைக்கும். ஆன்லைன் விளையாட்டுகளில் அதிக ஈடுபாடு தவிர்க்கவும். இன்று சாந்தமாக இருங்கள்.