மேஷம்
இன்று பங்கு முதலீட்டில் லாபம் பெறுவீர்கள். கட்டுமானத் துறையில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துவீர்கள். உறவினர்கள் வீடு தேடி வந்து உதவி செய்வார்கள். சக தொழிலாளர்களிடமும் நட்பை வளர்த்து சாதகம் அடைவீர்கள். மாமனார் வீட்டில் இருந்த மனத்தாங்கலை புத்திசாலித்தனத்தால் அகற்றுவீர்கள். நடைபாதை வியாபாரிகள் முன்னேற்றம் காண்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, சாம்பல், வெள்ளை, இளம் சிவப்பு.
அதிர்ஷ்ட எண்: 9, 7, 6, 1

ரிஷபம்
உங்களை வீழ்த்த தொழில் எதிரிகள் திட்டம் தீட்டுவார்கள். ஆனால் நீங்கள் சாமர்த்தியமாக சமாளித்து வெற்றி பெறுவீர்கள். நிலம் சம்பந்தப்பட்ட வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறப்புக்களின் உதவி இல்லாமல் நீங்கள் சில தடைகளை சந்திப்பீர்கள். வெளியூர் பயணங்கள் மூலம் வியாபாரத்தை விருத்தி செய்வீர்கள். நிலம் விற்பனையில் லாபம் அடைவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம்சிவப்பு, சிவப்பு.
அதிர்ஷ்ட எண்: 6, 1, 2, 9
மிதுனம்
தேவை இல்லாமல் வாக்குக்கொடுத்து வம்பில் மாட்டிக்கொள்ளாதீர்கள். கொடுத்த கடனை திருப்பிக் கேட்டால் பகையை சம்பாதிப்பீர்கள். மனைவி சொல்லும் ஆலோசனைகளை கவனமாக கேளுங்கள். அரசாங்கப் பைல்களில் கையெழுத்துப் போடும் போது கவனத்தை சிதற விடாதீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, கருப்பு, மஞ்சள்.
அதிர்ஷ்ட எண்: 5, 9, 4, 3
கடகம்
ரியல் எஸ்டேட் தொழிலில் மந்தநிலையால் சங்கட்டப்படுவீர்கள். வெளியூர் பயணங்களில் ஏமாற்றங்களைச் சந்திப்பீர்கள். உதவி கேட்டு வருபவர்களின் சிரமத்தைப் போக்குவீர்கள். திருமணம் சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக முடிப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், கருநீலம், பச்சை.
அதிர்ஷ்ட எண்: 2, 3, 8, 5
சிம்மம்
கடினமாக வேலை செய்து மேல் அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். பெட்டிக் கடை வியாபாரிகள் ஓரளவு லாபம் பார்ப்பீர்கள். வீட்டில் உள்ளவர்கள் உங்கள் மனம் கோணாமல் நடப்பதால் மகிழ்ச்சி அடைவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: இளம்சிவப்பு, சாம்பல், வெள்ளை.
அதிர்ஷ்ட எண்: 1, 7, 6
கன்னி
வியாபாரத்தில் புதுமையான திட்டங்களை செயல்படுத்துவீர்கள். கட்டிடத் தொழிலில் இருப்பவர்கள் ஓய்வின்றி வேலை பார்ப்பீர்கள். இல்லாதவர்களுக்குச் சேவை செய்வதன் மூலம் செல்வாக்கை உயர்த்துவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, இளம்சிவப்பு, வெள்ளை, சிவப்பு.
அதிர்ஷ்ட எண்: 5, 1, 2, 9
துலாம்
அடுத்தவர்களின் பாராட்டைப் பெறுவதற்கு ஆடம்பரமாகச் செலவு செய்வீர்கள். கூலி வேலை பார்ப்போர் குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்து குதூகலம் அடைவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு, கருப்பு, பச்சை.
அதிர்ஷ்ட எண்: 6, 9, 4, 3
விருச்சிகம்
வேலை சம்பந்தப்பட்ட ஒப்பந்தங்களை போடுவதில் சிரமங்கள் ஏற்படலாம். வாகனங்கள் ஓட்டும்போது செல்போனில் பேசாதீர்கள். கடன் பிரச்சனைகளால் தலை குனிவு அடைவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, மஞ்சள், பச்சை, கருநீலம்.
அதிர்ஷ்ட எண்: 9, 3, 8, 5
தனுசு
துவண்டு கிடந்த தொழிலை தூக்கி நிறுத்துவீர்கள். வாக்கு சாதுர்யத்தால் வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். வீட்டில் மங்கல நிகழ்ச்சிகளுக்கான ஆயத்த வேலையை செய்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சாம்பல், வெள்ளை, இளம்சிவப்பு.
அதிர்ஷ்ட எண்: 3, 7, 6, 1
மகரம்
கடின உழைப்பால் அதிகாரிகளை திருப்திப்படுத்துவீர்கள். உபத்திரவங்களைச் சந்திப்பீர்கள். சிறிய வியாபாரிகள் கடன் கொடுப்பதில் கண்டிப்பை கடைப்பிடிக்க தவறாதீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், இளம்சிவப்பு, வெள்ளை, சிவப்பு.
அதிர்ஷ்ட எண்: 8, 1, 2, 9
கும்பம்
பூர்வீகச் சொத்துக்களை விற்பதில் தடையை எதிர்நோக்குவீர்கள். குடும்பத்தில் சந்தான விருத்தி ஏற்பட்டு சந்தோசப்படுவீர்கள். உங்களுக்கு எதிராகச் செய்யப்படும் சூழ்ச்சிகளை தவிடு பொடியாக்குவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், வெள்ளை, கருப்பு, மஞ்சள்.
அதிர்ஷ்ட எண்: 8, 9, 4, 3
மீனம்
சொந்த வீடு வாங்குவதற்கான முயற்சியில் இறங்குவீர்கள். தொலைத்தொடர்பு சார்ந்த தொழில்களில் ஏற்றம் காண்பீர்கள். பரம்பரைச் சொத்துக்களின் பராமரிப்புச் செலவை அதிகரிப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், கருநீலம், பச்சை.
அதிர்ஷ்ட எண்: 3, 8, 5