மேஷம் – உயரதிகாரிகளின் இடையூறால் மன வேதனை ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்க வாய்ப்பு குறைவு. குடும்பத்தில் உள்ள இறுக்கமான சூழ்நிலை விலகி அமைதியாகும். உறவினர்களுடன் நல்ல உறவை பராமரிக்க வேண்டும்.
ரிஷபம் – போட்டி பந்தயங்களில் வெற்றி பெறுவீர்கள். தொழிலில் புதிய யுக்திகளை புகுத்துவீர்கள். பணியிடத்தில் மரியாதை கிடைக்கும். தொடங்க வேண்டிய தொழிலுக்குத் தேவையான ஆயத்தங்களை மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும்.
மிதுனம் – தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். எதிர்காலத்திற்கான சேமிப்பை அதிகரிக்க முயற்சிப்பீர்கள். நடைபாதை வியாபாரிகளுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். வேலை பார்ப்பவர்கள் உற்சாகமாக செயல்படுவார்கள். எதிர்பாராத பணவரவு கிடைக்கும்.
கடகம் – வேலை செய்யும் இடத்தில் சிறிய விபத்து ஏற்படலாம். குறித்த நேரத்தில் வேலை முடிக்க முடியாமல் திணறுவீர்கள். உடல்நல பிரச்சனைகள் ஏற்படக்கூடும். பிள்ளைகளின் கல்விக்காக அதிக செலவு செய்ய நேரிடும். குடும்பத்தில் அமைதி பராமரிக்க வேண்டும்.
மிதுனம்: நீங்கள் தொழில்துறையில் முன்னேற்றத்தின் பாதையில் செல்வீர்கள். எதிர்காலத்திற்கான சேமிப்பை நீங்கள் உயர்த்துவீர்கள். நடை வர்த்தகர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். அதிகாரிகள் உற்சாகமாக வேலை செய்வார்கள். நீங்கள் காதலிக்கு ஒரு ஸ்கூட்டியை வாங்குவீர்கள். எதிர்பாராத பணப்புழக்கத்துடன் நீங்கள் வங்கி கடன்களை செலுத்துவீர்கள். நீங்கள் திறமையாக செலவிடுவீர்கள் .
சிம்மம் – சிக்கல் ஏற்படுத்தும் வேலைகளை மேற்கொள்ள வேண்டாம். வெளியூர் பயணங்களை ஒத்திவைக்கலாம். பணியிடத்தில் கவனமாக செயல்படுவது நல்லது. நகைச்சுவையாக பேசுவது எதிர்ப்பை உருவாக்கக்கூடும். சந்திராஷ்டமம் காரணமாக எச்சரிக்கையுடன் செயல்படவும்.
கன்னி – நல்ல செய்திகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். தொழிலில் எதிர்பாராத வரவு கிடைக்கும். வியாபாரிகள் அதிக விற்பனை காண்பார்கள். சுப நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மேற்கொள்வீர்கள். வெளியூர் பயணங்கள் நன்மை தரும்.
துலாம் – வியாபாரத்தில் தேக்க நிலை விலகும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்ச்சியடைவீர்கள். காதலருடன் நல்ல உறவு தொடரும். பழைய கடன்களை அடைக்க முயற்சிப்பீர்கள். பணியிடத்தில் மேலதிகாரிகளிடம் நல்ல பெயர் கிடைக்கும்.
விருச்சிகம் – வேலை செய்யும் இடத்தில் பணிச்சுமை அதிகரிக்கலாம். சிலர் எதிர்ப்புத் தரலாம். தொழிலுக்காக புதிய சாதனங்களை வாங்குவீர்கள். சொத்து தொடர்பான பிரச்சனைகள் தீரும். குடும்பத்தில் நல்ல நிகழ்வுகள் நடைபெறும்.
தனுசு – குடும்ப ஒற்றுமைக்கான முயற்சி வெற்றி பெறும். வீடு கட்ட மனை வாங்குவீர்கள். பண பற்றாக்குறையை நீக்குவீர்கள். வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் முன்னேற்றம் காண்பீர்கள். வெளிநாட்டு உதவி கிடைக்கும்.
மகரம் – தொழிலை விரிவுபடுத்த புதிய திட்டங்களை மேற்கொள்வீர்கள். சகோதர சகோதரிகளின் உதவியால் சந்தோஷம் அடைவீர்கள். தாமதமான அரசாங்க வேலைகள் சாதகமாக மாறும். தாராளமாக கடன் பெறுவீர்கள். வியாபாரத்தில் துணிச்சலாக செயல்படுவீர்கள்.
கும்பம் – அண்டை அயலாருடன் கருத்து வேறுபாடுகளை நீக்குவீர்கள். மேலதிகாரிகளின் உற்சாகத்தால் கடுமையாக வேலை செய்வீர்கள். வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்து குடும்பத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்துவீர்கள். வேலை சம்பந்தமான பிரச்சனைகள் குறையும்.
மீனம் – மறைந்திருந்த திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். சூட்சுமங்களை பயன்படுத்தி வியாபாரத்தில் வெற்றி பெறுவீர்கள். மேலதிகாரர்களின் உதவி கிடைக்கும். வாகன பழுதால் செலவு அதிகரிக்கலாம். பெரிய மனிதர்களின் அறிமுகம் நல்ல பயனைத் தரும்.