அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் செல்வம் பெருகும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகும். ஆனால் தங்கத்தை வாங்க இயலாதவர்கள் மற்ற அதிர்ஷ்ட பொருட்களை வாங்கி அதனை மாற்றியாகக் கருதி வாழ்வில் செழிப்பு பெறலாம். இந்த ஆண்டுக்கான அட்சய திருதியை ஏப்ரல் 30ஆம் தேதி புதன்கிழமையாகும். ஆனால் திருதியை திதி ஏப்ரல் 29ஆம் தேதி காலை 5.31 மணிக்கே துவங்கி, ஏப்ரல் 30ஆம் தேதி மதியம் 2.12 மணிவரை மட்டுமே உள்ளது. ஏப்ரல் 30ஆம் தேதி காலை சூரியோதயத்தில் திருதியை திதி உள்ளதால், அந்த நாளே அட்சய திருதியையாக அனுசரிக்கப்படுகிறது.

அட்சய திருதியை என்பது, “பெருகும் நாளாக” கருதப்படுகிறது. எனவே, அந்த நாளில் என்ன பொருட்கள் வாங்கினாலும் அதிர்ஷ்டம் பெருகும் என்பது நம்பிக்கை. தங்கம் தவிர விருப்பமான மற்ற பொருட்களையும் மக்கள் வாங்கலாம். முதலாவது, வெள்ளி பொருட்கள் – பாத்திரங்கள், நாணயங்கள் அல்லது நகைகளை வாங்குவது நல்லதாயிருக்கும். வெள்ளி பரிசளிப்பதும் அதிர்ஷ்டம் தரும்.
இரண்டாவது, வாகனங்கள். கார் அல்லது பைக் வாங்க இந்த நாள் சிறந்ததாகக் கருதப்படுகிறது. பாதுகாப்பான பயணத்திற்கும், வெற்றிகரமான வாழ்க்கைக்குமான முன்னோட்டமாகவும் இது பார்க்கப்படுகிறது. மூன்றாவது, சொத்து முதலீடுகள். நிலம், வீடு அல்லது பிற சொத்துக்களை வாங்குவதற்கும் இந்த நாள் மிகவும் சிறந்ததாகும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
நான்காவது, மரச்சாமான்கள். வீட்டுக்குள் புதிய சோபா, டைனிங் டேபிள் போன்ற மரப்பொருட்களை வாங்குவது வீட்டு செழிப்பை அதிகரிக்கும். ஐந்தாவது, மின்னணு சாதனங்கள். ஸ்மார்ட்போன், லேப்டாப் அல்லது டிவி போன்றவை இந்த நாளில் வாங்கினால் நலன்கள் பெருகும் என்பது நம்பிக்கை.
ஆறாவது, பங்குச் சந்தையில் முதலீடு செய்வதும் ஒரு சிறந்த தேர்வாகும். இந்த நாளில் முதலீடு செய்வது நீண்ட கால வருமானத்திற்கும், நிதி வளர்ச்சிக்கும் வழிவகுக்கும். அட்சய திருதியை என்பது நம்பிக்கையின் நாளாக மட்டுமல்ல, செயல்முறையிலும் முன்னேற்றத்தை அளிக்கக்கூடியதாக இருக்கின்றது.
தங்கம் வாங்க இயலாதவர்கள், இந்த முக்கிய நாளில் மனதிற்கு ஏற்ப எந்த பொருட்கள் வேண்டுமானாலும் வாங்கி அதனை ஒரு புதிய துவக்கமாகக் கருதி வாழ்க்கையில் செழிப்பை வரவேற்கலாம். எதிர்கால வளர்ச்சி, நலம், பாதுகாப்பு ஆகியவை இந்த நாளில் மேற்கொள்ளப்படும் நன்னடமுறைகளால் உறுதி செய்யப்படலாம். மொத்தத்தில், அட்சய திருதியை என்பது நம்பிக்கையை வளர்க்கும் புனித நாளாகவே இருந்து வருகிறது.