சென்னை: தங்கலான் படத்தின் மினுக்கி மினுக்கி பாடல் இதுவரை 10 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பா. இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்திருந்த ‘தங்கலான்’ படம் கடந்த ஆக.15ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது, இப்படம் நெதர்லாந்தில் ரோட்டர்டம் திரைவிழாவுக்கு தேர்வாகியுள்ளது.
இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்ற ‘மினுக்கி மினுக்கி… ‘ பாடல் யூடியூப்பில் 10 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது. ஜி. வி. பிரகாஷ் இசையமைப்பில் உருவான இப்பாடலை உமா தேவி எழுத, சிந்துரி விஷால் பாடியுள்ளார்.
இந்த படத்தில் மிரட்டலான நடிப்பை நடிகர் விக்ரம் வெளிப்படுத்தி இருப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது.