பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி மற்றும் பலர் நடித்துள்ள கல்கி படத்தை நாக் அஸ்வின் இயக்கி வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துள்ளது. இரண்டு பாகங்களைக் கொண்ட இந்தப் படத்தின் முதல் பாகம் ஜூன் 27ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.
கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், படம் ஆரம்பம் முதலே வசூலை அள்ளியது. இந்நிலையில், வசூல் 1000 கோடி ரூபாயை தாண்டியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதன் மூலம் பாகுபலி 2 படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக 1000 கோடி ரூபாய் வசூல் செய்த தென்னிந்திய ஹீரோ என்ற பெருமையை பிரபாஸ் பெற்றுள்ளார்.
இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள அமிதாப் பச்சன் இது குறித்து பேசுகையில், “பிரபாஸுக்கு 1000 கோடி ரூபாய் என்பது சாதாரண விஷயமாக இருக்கலாம். ஏனெனில் அவருடைய படங்கள் ஏற்கனவே இந்த மைல்கல்லை எட்டிவிட்டது. ஆனால் எனக்கு அது பெரிய விஷயம். நான் இந்தப் படத்தை நான்கு முறை பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் ஒரு புதிய அனுபவம் கிடைக்கிறது.” என உற்சாகத்துடன் பேசினார்.