இன்று தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ், முதல் நாள் படப்பிடிப்பிற்கு செல்ல தயாராகும் போது தனது தாயார் தனக்கு கூறிய இரண்டு அறிவுரைகளை ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.
நடிகை நயன்தாராவுக்கு அடுத்தபடியாக ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். பிரபல நடிகை மேனகா மற்றும் மலையாள திரைப்பட தயாரிப்பாளர் சுரேஷ் ஆகியோரின் மகளான இவருக்கு சிறுவயதிலேயே குழந்தை நட்சத்திரமாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
பின்னர் 2013-ல் மலையாளத்தில் மோகன்லால் நடித்த ‘கீதாஞ்சலி’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, பல மலையாளப் படங்களில் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ், 2015ஆம் ஆண்டு இரண்டாம் ஆண்டு இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கிய ‘இது என்ன மாயம்’ படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக தமிழில் அறிமுகமானார்.
இவரது நடிப்பில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று தோல்வியை தழுவியது. இப்படத்தை தொடர்ந்து ரஜினி முருகன், ரெமோ, சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கீர்த்தி நடித்த படங்கள் வெளியானது. எப்போதும் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிப்பதில் ஆர்வம் காட்டி வரும் கீர்த்தி சுரேஷ், தனுஷ் ஜோடியாக தொடரி, விஜய்யுடன் பைரவா ஆகிய படங்களில் நடித்து குறுகிய காலத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகள் பட்டியலில் இணைந்தார்.
நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கைக் கதையை அடிப்படையாகக் கொண்டு நாக் அஸ்வின் இயக்கிய மகாநதி திரைப்படம் அவரது கேரியரில் மாஸ்டர் பீஸ் படமாக அமைந்தது, இதில் கீர்த்தி சுரேஷ் சாவித்திரியாக நடித்தார். இந்தப் படம் ஒட்டுமொத்த திரையுலகையும் கவர்ந்ததோடு கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருதையும் பெற்றுத் தந்தது.
இப்படத்திற்கு பிறகு விஜய், விக்ரம், விஷால், என முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்தவர், மறுபுறம் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட பெங்குயின், மிஸ் இந்தியா, குட் லக் சகி போன்ற படங்களிலும் நடித்தார். அவர் நடித்துள்ள ரகுதத்தா படம் கூடிய விரைவில் வெளியாக உள்ளது.
ரிவால்வர் ரீட்டா, கன்னிவெடி போன்ற படங்களிலும் நடித்து வருகிறார்.பிரபாஸ் நடித்து 1100 கோடி வசூல் கிளப்பில் இணைந்த கல்கி 2898 படத்தில் புஜ்ஜி என்ற ரோபோவுக்கு குரல் கொடுத்தவர் கீர்த்தி சுரேஷ். தென்னிந்தியத் திரையுலகைக் கடந்த கீர்த்தி சுரேஷ், அட்லீ தயாரிக்கும் பாலிவுட் படமான ‘பேபி ஜான்’ படத்தில் வருண் தவானுக்கு ஜோடியாக நடிக்கிறார்.
இந்நிலையில், சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகை கீர்த்தி சுரேஷ், நடிகையானபோது அம்மா சொன்ன இரண்டு அறிவுரைகளை பகிர்ந்துள்ளார். முதல் நாள் ‘கீதாஞ்சலி’ படப்பிடிப்பிற்குக் கிளம்பும்போது அம்மா என்னிடம் இரண்டு விஷயங்கள் சொன்னார்கள்.ஒன்று நடிகைன்னா நேரம் ரொம்ப முக்கியம்.இன்னொன்று சின்ன பையனிடம் இருந்து. இயக்குனருக்கு யூனிட், அனைவரும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும், எல்லோருக்கும் ஒரே மாதிரியா மரியாதை கொடுக்க வேண்டும் என்று சொன்னார்கள், அதை அன்று முதல் இன்று வரை கடைபிடித்து வருவதாகவும் கூறியுள்ளார்.