நடிகர் பப்லு, தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். பிறகு குறிப்பிடத்தக்க நடிகராகவும், வில்லன் வேடத்திலும் தனக்கென ஒரு பெயரை ஏற்படுத்தினார்.
“நான்கு சுவர்கள்” படத்தின் மூலம் அறிமுகமான அவர், பல பிரபல படங்களில் நடித்துள்ளார்.பப்லு, பீனா என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். அவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். ஆனால், சில காரணங்களால் அவர்கள் பிரிந்தனர்.
பின்னர் அவர் ஷீத்தல் என்ற இளம் பெண்ணுடன் காதலில் இருந்தார்.ஷீத்தல் சமீபத்தில் இன்னொருவரை திருமணம் செய்து கொண்டார். இதுகுறித்து பேசும் போது, “பப்லுவுடன் இருக்கும் காலத்தில் அவர் கொடுத்த பரிசுகளை திருப்பி அவருக்கு கொடுத்துவிட்டேன்.
அவருடன் வாழ்க்கை எனக்கு பொருத்தமாக இல்லை என்று உணர்ந்ததால் பிரிந்தேன். இப்போது எனக்கு பிடித்தவருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறேன்,” என்றார்.இந்த பேச்சு பப்லுவின் ரசிகர்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது.