மலையாள திரையுலகில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியான பிறகு, பல நடிகைகள் திரையுலகம் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர். இதன் அடிப்படையில் சிலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் நடிகை ரீமா கல்லிங்கல் போதை விருந்தளித்தார். இதில் ஏராளமான இளம்பெண்கள், ஆண்கள் கலந்து கொண்டு போதைக்கு அடிமையாகினர். இது தொடர்பாக கொச்சியில் உள்ள ரீமா வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. அவரை ஏன் யாரும் விசாரிக்கவில்லை?’ என பாடகி சுசித்ரா கேள்வி எழுப்பியுள்ளார்.
இது சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியது. பாடகி சுசித்ரா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ரீமா கல்லிங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “பாடகி சுசித்ரா என் மீது ஆதாரம் இல்லாமல் குற்றம் சாட்டியுள்ளார்.
அவர் மீது சிறப்பு புலனாய்வு குழுவில் புகார் அளித்துள்ளேன். மேலும் அவர் மீது அவதூறு வழக்கு தொடர நோட்டீஸ் அனுப்பியுள்ளேன்.