சன் டிவி தொடர்கள் மூலம் பிரபலமான பல கலைஞர்கள் உள்ளனர். நடிகை ராணி சன் டிவி தொடங்கியதில் இருந்து சீரியல்களில் வில்லியாக நடித்து வருகிறார்.
அலை தொடர் மூலம் சினிமா பயணத்தை தொடர்ந்த இவர், யாத்திரை சொந்தம், அதிப்பூக்கள், வள்ளி, பாண்டவர் இல்லம், முன் ஜென்மம், பூவே உனக்காக, குலதெய்வம், ரோஜா, சந்திரலேகா என பல தொடர்களில் நடித்துள்ளார். நான் படிக்கும்போதே என் அம்மா இறந்துவிட்டார், எனக்கு அக்கா, தம்பிகள் இருந்ததால் கல்லூரியில் படிக்கும்போதே திருமணம் நடந்தது.
மகன் பிறந்த பிறகு நடிக்க ஆரம்பித்தேன், கடவுள் அருளால் தொடர்ந்து பணியாற்றுகிறேன். நான் வளர்ந்து, படித்து, திருமணம் செய்து, நடிக்க, என் கணவர், குழந்தைகளை என் தந்தை பார்த்ததில்லை. இது என் வாழ்க்கையில் நான் சந்தித்த மிகப்பெரிய சோகம் என்று கூறினார்.