‘மாயக்கூத்து’ என்பது அறிமுக இயக்குனர் ஏ.ஆர். ராகவேந்திரா எழுதி இயக்கிய ஒரு சுயாதீன திரைப்படம். டெல்லி கணேஷ், மு. ராமசாமி, சாய் தீனா, நாகராஜன், பிரகதீஸ்வரன், முருகன், ஐஸ்வர்யா, காயத்ரி, ரேகா மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ராகுல் மூவி மேக்கர்ஸ் மற்றும் அபிமன்யு கிரியேஷன்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.

சுந்தர் ராம் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார், அஞ்சனா ராஜகோபாலன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். சமூகத்தில் படைப்பாளிகளின் பொறுப்பை எடுத்துக்காட்டும் இந்தப் படம், ஒரு கற்பனை த்ரில்லர் வடிவத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது.