தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பன்முகத் திறமைகளை வெளிப்படுத்தியவர் சிம்பு. நடிகராக மட்டும் அல்லாமல், தயாரிப்பாளர், இயக்குநர், பாடலாசிரியர் மற்றும் பாடகராகவும் பணியாற்றியுள்ளார். சிம்புவுக்கு தனித்துவமான ரசிகர்கள் கூட்டம் எப்போதும் இருந்தே வந்துள்ளது.
சிம்பு கடைசியாக நடித்த “பத்து தல” திரைப்படத்திற்கு பிறகு, தக் லைஃப் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் கமல்ஹாசன், த்ரிஷா ஆகியோருடன் இணைந்து நடிக்கிறார். மணிரத்னம் இயக்கிய இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். “விண்ணைத்தாண்டி வருவாயா” படத்திற்கு பிறகு, த்ரிஷாவுடன் சிம்பு மீண்டும் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
சிம்பு பரப்பான விமர்சனங்கள் மற்றும் சர்ச்சைகளுக்கு அடிக்கடி ஆளாகியிருந்தாலும், கடந்த சில ஆண்டுகளாக இதுபோன்றவை குறைந்துள்ளன. தொழில்முறையில் கால்ஷீட் பிரச்சனைகள் மற்றும் படப்பிடிப்பில் பங்கேற்காத குற்றச்சாட்டுகளும் முன்பு உலவின.2018-இல் உடல் பருமனால் சண்டைக்காட்சிகளில் சிக்கல்களை சந்தித்த அவர், உடலைக் குறைத்து ரசிகர்களுக்கு வீடியோக்களை பகிர்ந்து வரவேற்பைப் பெற்றார்.
இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன் அளித்த அவரது பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.அந்த பேட்டியில், “பயத்தை வெல்ல நாமே பயமாக மாற வேண்டும். இருட்டில் பயமாக இருந்தால், நாமே இருட்டாக மாறி அதை வெல்லலாம்” என சிம்பு கூறினார். அவரது பேச்சு சிக்கலானவையாக இருந்தாலும், அதை பலர் பொருத்தமாக எடுத்துக் கொண்டனர்.சிம்புவின் பேச்சை தொடர்புபடுத்தி, கமல்ஹாசனின் “தெனாலி” திரைப்படம் நினைவுக்கு வருகிறது. பேய், இருட்டு போன்றவற்றை பேசி தனித்துவமான கருத்துகளை வெளிப்படுத்திய இந்த பேட்டி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.