லோகேஷ் கனகராஜின் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதில் சத்யராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதி ஹாசன், உபேந்திரா மற்றும் சௌபின் சாஹிர் ஆகியோரும் நடிக்கின்றனர். ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகும் இந்தப் படத்தில் இந்தி நடிகர் அமீர் கான் ஒரு சிறப்பு வேடத்தில் நடிக்கிறார்.
30 ஆண்டுகளுக்கு முன்பு ரஜினிகாந்துடன் நடித்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். ஆமிர் கான் கூறுகையில், “30 ஆண்டுகளுக்கு முன்பு நான் முதன்முதலில் என் திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கியபோது, ரஜினிகாந்துடன் ‘ஆதங்க் ஹி ஆதங்க்’ என்ற படத்தில் நடித்தேன். அது ஹாலிவுட் படமான ‘காட்ஃபாதர்’ படத்தின் தாக்கத்தில் எடுக்கப்பட்ட படம்.

அது சரியாகப் போகவில்லை. இப்போது லோகேஷ் கனகராஜ் ‘கூலி’ படத்திற்காக என்னை அணுகியபோது, ரஜினிகாந்த் சாரின் பெயரைக் கேட்டவுடன் உடனடியாக ஒப்புக்கொண்டேன். ஏனென்றால் நான் ரஜினிகாந்த் சாரின் மிகப்பெரிய ரசிகன்.
நான் அவரை மிகவும் நேசிக்கிறேன். அந்தப் படத்தில் என் கதாபாத்திரம் பற்றி அதிகம் சொல்ல முடியாது. நான் ஒரு முக்கியமான வேடத்தில் நடிக்கிறேன்,” என்று அவர் கூறினார்.