சென்னை: அப்பாஸ் பத்து ஆண்டுகளுக்கு முன்பு சினிமாவை விட்டு வெளியேறி தனது குடும்பத்துடன் நியூசிலாந்தில் குடியேறினார். இப்போது அவர் மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ளார்.
ஜி.வி. பிரகாஷ் குமார் ஹீரோவாக நடிக்கும் படத்தில் அவர் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஜெயவர்தனன் பியாண்ட் பிக்சர்ஸ் மூலம் தயாரிக்கும் இந்தப் படத்தை ஜெய்காந்த் சுரேஷ் இணைந்து தயாரிக்கிறார். மரியா ராஜா இளஞ்செழியன் இயக்குகிறார்.

கௌரி பிரியா கதாநாயகியாக நடிக்கிறார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். மதன் கிறிஸ்டோபர் ஒளிப்பதிவு செய்கிறார். படம் பற்றிப் பேசுகையில், மரியா ராஜா இளஞ்செழியன், “இது நகைச்சுவை நிறைந்த குடும்பப் படமாக இருக்கும்.
தற்போது பொள்ளாச்சியில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. ஜி.வி. பிரகாஷ் இதுவரை நடிக்காத ஒரு வேடத்தில் நடிக்கிறார். அப்பாஸ் எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதை இப்போது சொல்ல முடியாது.”