ஜெர்மனி: கடந்த ஒரு வருடமாக, துபாய் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நடைபெறும் சர்வதேச கார் பந்தயங்களில் பங்கேற்று வருகிறார். துபாயில் நடைபெற்ற கார் பந்தயத்தில் 2-வது மற்றும் 3-வது இடத்தைப் பிடித்தார். இந்த நிலையில், கார் பந்தயங்களுக்கு இடையில் அஜித் குமார் அளித்த நேர்காணல் வலைத்தளங்களில் வைரலானது.
தற்போது ஜெர்மனியில் நடைபெறும் கார் பந்தயத்தில் பங்கேற்று அங்குள்ள ரசிகர்களைச் சந்தித்தார். அவருடன் செல்ஃபி மற்றும் வீடியோ எடுத்த ரசிகர்கள், அவருடன் தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். அப்போது அவர்களிடம் பேசிய அஜித் குமார், ‘கார் பந்தயத்தை பிரபலப்படுத்துங்கள். தயவுசெய்து என்னை பிரபலமாக்காதீர்கள். இங்கு கார் பந்தயத்தில் ஈடுபடும் இந்திய வீரர்களை முன்னிலைப்படுத்துங்கள். இங்குள்ள ஒவ்வொரு வீரரும் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் போராடுகிறார்கள்.

பலருக்கு அவர்களின் சிரமங்கள் தெரியாது. நிச்சயமாக ஒரு நாள் இந்திய வீரர்களும் ஃபார்முலா ஒன் கார் பந்தயத்தில் சாம்பியன்களாக மாறுவார்கள். மோட்டார் விளையாட்டுகளை பிரபலப்படுத்துங்கள்’ என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.
அஜித் குமாரின் பேச்சு வைரலானதை அடுத்து, பல ரசிகர்கள் அவர் கார் பந்தயத்தில் ஈடுபடுவது குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.