அஜித் குமார் தற்போது சர்வதேச கார் பந்தயங்களில் பங்கேற்று வருகிறார். இதற்காக, அவர் ‘அஜித் குமார் ரேசிங்’ என்ற அணியைத் தொடங்கியுள்ளார். இந்த அணி உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் கார் பந்தயங்களில் பங்கேற்று வருகிறது.
துபாய், இத்தாலி மற்றும் ஸ்பெயினில் நடைபெற்ற பந்தயங்களில் பங்கேற்ற அவரது அணி, கடந்த வாரம் பார்சிலோனாவில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்றது. அஜித் குமாரைப் பார்க்க ரசிகர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை அங்கு கூடியிருந்தனர். அவர்களில் சிலர் அஜித் குமாரைக் கண்டதும் ஆரவாரம் செய்து விசில் அடித்தனர்.

இதைக் கவனித்த அஜித் கோபமடைந்தார். அவர் விரலை அசைத்து ‘அமைதியாக இரு’ என்று சைகை செய்தார். உடனடியாக, ரசிகர்கள் ஆரவாரத்தை நிறுத்திவிட்டு அமைதியாகிவிட்டனர்.
இந்தக் காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. பார்சிலோனா பந்தயத்தை முடித்துவிட்டு அஜித் துபாய் திரும்பியுள்ளார். அடுத்து டிசம்பரில் மலேசியாவில் நடைபெறும் கார் பந்தயத்தில் பங்கேற்பார்.