சென்னை : நடிகர் அர்ஜுன் தாஸுக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. அஜித்துடன் இவர் நடித்த குட் பேட் அக்லி படம் பெரிய அளவில் வசூல் வேட்டையாடியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
15-வது தாதா சாகிப் பால்கே திரைப்பட விழாவில், கடந்தாண்டு வெளியான ரசவாதி படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருது அர்ஜுன் தாஸுக்கு வழங்கப்பட்டுள்ளது. சாந்தகுமார் இயக்கிய இப்படத்தில் தன்யா ரவிச்சந்திரன் நடித்திருந்தார்.
முன்னதாக, நியூஜெர்சி இந்திய மற்றும் சர்வதேச திரைப்பட விழாவிலும் சிறந்த நடிகருக்கான விருதை இப்படத்திற்காக அர்ஜுன் தாஸ் பெற்றிருந்தார். குட் பேட் அக்லியில் இவரது நடிப்பு மாபெரும் வரவேற்பைப் பெற்றது.
அந்தப் படமும் வசூலில் பெரிய அளவில் வேட்டையாடியது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமா மட்டுமின்றி அனைத்து மொழி படங்களிலும் அர்ஜுன் தாஸிற்கு ரசிகர்கள் உள்ளனர்.