சென்னை: நடிகர் சிபிராஜின் மகன் தீரன் தற்காப்பு கலையில் இரண்டு பதக்கங்களையும் வென்றுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களின் வாரிசுகள் நடிக்க களமிறங்கி சாதனை செய்தவர்கள் பலர் உள்ளனர். அப்படி நடிகர் சத்யராஜின் மகன் என்ற அடையாளத்தோடு ஸ்டூடன்ட் நம்பர் 1 என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார்.
அதன்பின் ஜோர், வெற்றிவேல் சக்திவேல், கோவை பிரதர்ஸ், லீ, நாய்கள் ஜாக்கிரதை, ஜாக்சன் துரை, கட்டப்பாவ காணோம், சத்யா, ரங்கா, மாயோன் என தொடர்ந்து படங்கள் நடித்தார்.
சிபி சத்யராஜிற்கு கடந்த 2008ம் ஆண்டு ரேவதி என்பவருடன் திருமணம் நடந்தது, இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இவரின் மூத்த மகன் தீரன் பள்ளி படிப்பில் அதிக ஆர்வம் காட்டுவதோடு தற்காப்பு பயிற்சியிலும் சிறந்து விளங்கி வருகிறாராம்.
தற்போது சிபிராஜின் மகன் தீரன் இரண்டு பதக்கங்களையும் தற்போது வென்றுள்ளாராம். கொல்கத்தாவில் நடைபெற்ற 8 ஆவது இந்திய TIA OPEN TAEKWONDO CHAMPIONSHIP 2024 போட்டியில் எனது மகன் தீரன் ஒரு தங்கம் மற்றும் ஒரு வெண்கல ஒரு வென்றுள்ளாராம். சிபி சத்யராஜ் இந்த தகவலை வெளியிட்டு தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தியுள்ளார்.