சென்னை : நடிகர் ஜெய் நடிப்பில் வெளியான பேபி & பேபி. திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிமுக இயக்குநர் பிரதாப் இயக்கத்தில் ஜெய் மற்றும் சத்யராஜ் ஆகியோர் பிரதான பாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம் பேபி & பேபி.
நகைச்சுவை பாணியில் எடுக்கப்பட்ட இப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இதையும் படிக்க: நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் ஓடிடி தேதி!
மேலும் இப்படத்தில் யோகி பாபு, கீர்த்தனா, சாய் தன்யா, பிரக்யா நக்ரா, இளவரசு, ஸ்ரீமன், ஆனந்த்ராஜ், ரெடின் கிங்ஸ்லி, நிழல்கள் ரவி, சிங்கம்புலி, தங்கதுரை, ராமர், ராஜேந்திரன், சேஷு, பிரத்தோஷ் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். யுவராஜ் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
இந்நிலையில், பேபி & பேபி படம் மார்ச் 21 ஆம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.