சென்னை: சிவராஜ்குமாருக்கு நான் சித்தப்பா என்று கன்னடத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார் நடிகர் கமல்ஹாசன்.
கன்னட மொழி குறித்து கமல்ஹாசன் கூறிய கருத்துக்கு கர்நாடகாவில் எதிர்ப்பு வலுத்துள்ள நிலையில், “கமல்ஹாசனை விமர்சிப்பவர்கள் கன்னட மொழிக்காக என்ன செய்தார்கள்?” என்று நடிகர் சிவராஜ்குமார் கேள்வி எழுப்பி கமல்ஹாசனுக்கு ஆதரவாக பேசியிருந்தார்.
இந்த நிலையில், திரையுலகில் 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள கன்னட நடிகர் சிவராஜ்குமாருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், நடிகர் கமல்ஹாசன் கன்னடத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கன்னடத்தில் வாழ்த்து தெரிவித்த வீடியோவை கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார். வீடியோவில் பேசியுள்ள கமல்ஹாசன், சிவான்னாவுக்கு நான் சித்தப்பா மாதிரி. ராஜ்குமார் அண்ணா எனக்கு காட்டின அன்பு எதிர்பாராத அன்பு. சிவான்னாவை பொறுத்தவரை இந்த 40 வருஷம் எப்படி ஓடிச்சுன்னு எனக்கு தெரியல. இன்னிக்கு மாபெரும் நட்சத்திரமாக உயர்ந்து சாதித்துக் கொண்டிருக்கிற விஷயம்… இனியும் சாதிக்கக்கூடிய விஷயம் எனக்கு மிகுந்த சந்தோஷத்தை அளிக்கிறது என்று கூறியுள்ளார்.