‘தக் லைஃப்’ படத்தை விளம்பரப்படுத்த பல்வேறு மாநிலங்களில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுகளில் கமல் கலந்து கொண்டார். தற்போது அவர் வெளிநாடுகளில் படத்தை விளம்பரப்படுத்தி வருகிறார். அங்கு நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், “‘தக் லைஃப்’ படத்தைப் பாருங்கள். அற்புதமான தொழில்நுட்ப வல்லுநர்கள் அதில் பணியாற்றியுள்ளனர். முதலில் ஒரு சினிமா ரசிகர், பின்னர் ஒரு நடிகர். நான் ‘தக் லைஃப்’ படத்தைப் பார்த்திருக்கிறேன்.

உங்களுக்கு பரிமாறப்படும் உணவில் சிலவற்றை எடுத்து முயற்சித்தேன். மணிரத்னம் அல்லது கமல்ஹாசன் இருவரையும் எனக்குத் தெரியாது என்று வைத்துக்கொள்வோம். ஆனால், இந்தப் படம் என்னிடம் பேசியது. அந்த உரையாடலின் நீட்சியாக நான் இங்கே தைரியமாகப் பேசுகிறேன். சிறிய தடைகள் இருந்தாலும், நீங்கள் என்னைத் தூக்கி, என்னை இறக்கிவிட வேண்டிய இடத்தில் இறக்கிவிடுவீர்கள்,” என்று கமல்ஹாசன் கூறினார்.
‘தக் லைஃப்’ படத்திற்கான டிக்கெட் முன்பதிவு இன்று காலை முதல் தமிழ்நாட்டில் தொடங்கியது. மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, அபிராமி, த்ரிஷா, நாசர் மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘தக் லைஃப்’. ஜூன் 5-ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தை ராஜ்கமல் புரொடக்ஷன்ஸ், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இணைந்து தயாரிக்கின்றன.