சென்னை: நடிகர் மகேஷ்பாபுவை வைத்து இயக்குனர் ராஜமவுலி இயக்கி வரும் படத்தில் நடிகர் மாதவன் ஒரு முக்கிய ரோலில் நடிக்கிறார். நடிகர் மகேஷ்பாபுவின் அப்பா ரோல் தான் அது என தகவல் வெளியாகியிருக்கிறது.
RRR படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு ராஜமவுலி சூப்பர் ஸ்டார் முகேஷ் பாபுவை வைத்து ஒரு படம் இயக்கி வருகிறார். அந்த படத்தில் நடிகை பிரியங்கா சோப்ரா தான் ஹீரோயினாக நடிக்கிறார்.
இந்த படத்தின் முக்கிய காட்சிகளை கென்யா நாட்டில் படமாக்க இருக்கிறார் இயக்குனர். மேலும் ஹைதராபாத்தில் வாரணாசி கோவில் போன்ற செட் தத்ரூபமாக அமைக்கப்பட்டிருக்கிறது. அதற்காக மிகப்பெரிய அளவு செலவு செய்திருக்கிறார் இயக்குனர் ராஜமவுலி.
SSMB29 என தற்காலிகமாக அழைக்கப்பட்டு வரும் இந்த படத்தில் நடிகர் மாதவன் ஒரு முக்கிய ரோலில் நடிக்கிறார். நடிகர் மகேஷ்பாபுவின் அப்பா ரோல் தான் அது என தகவல் வெளியாகியிருக்கிறது.
நடிகர் மாதவன் மகேஷ்பாபுவை விட வெறும் ஐந்து வயது மட்டுமே மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 50 வயது நடிகருக்கு மாதவன் அப்பாவாக நடிக்கிறாரா என பலரும் ஆச்சரியமடைந்திருக்கின்றனர். இருப்பினும் இதுபற்றி படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்டால் தான் உறுதியாகும் .