சென்னை : குடும்பஸ்தன் படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதால் விநியோகஸ்தர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் நடிகராக மணிகண்டன் மாறியுள்ளார்.
ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் மணிகண்டன், சாவ்னா மேகனா, குரு சோமசுந்தரம், ஆர். சுந்தரராஜன், பிரசன்னா, பாலசந்திரன், ஜென்ஸன் திவாகர் ஆகியோர் நடிப்பில் கடந்த ஜனவரி 24ம் தேதி வெளியான படம் ‘குடும்பஸ்தன்’.
இதுவரை ரூ.12.5 கோடிக்கு மேல் இப்படம் வசூல் செய்திருக்கிறது. இதன் மூலம் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் வளர்ந்து வரும் இயக்குநர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் நாயகனாக மணிகண்டன் திகழ்கிறார்.
விமர்சனத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய மணிகண்டனுக்கு எதிர்காலம் அருமையாக உள்ளது என்று கோலிவுட் வாசிகள் தெரிவிக்கின்றனர்.