சென்னை: கேவலப் பிறவியாக வாழ வேண்டுமா என்று நடிகர் பார்த்திபன் காட்டமாக கேள்வி எழுப்பி பதிவிட்டுள்ளார். ஏன் தெரியுங்களா?
திரை பிரபலங்கள் பற்றி அடிக்கடி வதந்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கம். அந்தவகையில் இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் உடல்நிலை குறித்து நேற்று சமூக வலைதளங்களில் தகவல்கள் வைரலானது. அதேவேளை பார்த்திபன் நலமாக இருப்பதாகவும் திரையுலகினர் கருத்துகளை தெரிவித்தனர்.
இந்தநிலையில் வதந்திகளைக் கண்டித்து பார்த்திபன் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில், ”இது போன்ற செய்திகள் தான் மரணமடைய வேண்டும். இதை தயாரிப்பவர்கள் தங்களின் வாய்க்கரிசிக்காக செய்தாலும், மற்றவர்களின் மனதை பிணமாக்கி அதை கொத்தித் தின்னும் கேவலப் பிறவியாக வாழ வேண்டுமா? என சம்பந்தப்பட்டவர்களின் குடும்பம் யோசிக்க வேண்டும்.
இது பல முறை, என்னை மட்டுமல்ல பலரையும் இறைவனடி சேர குறுக்கு வழியில் டிக்கெட் வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள். அவர்களாகவே திருந்த அந்த சுடுகாட்டு சுடலை சாமியோ, ஆறாவது அறிவோ உதவ வேண்டும்”, என்று காட்டமாக குறிப்பிட்டுள்ளார்.